Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 மார்ச், 2022

வீட்டின் அம்சங்கள் கொண்ட காரை உருவாக்கும் பணியில் மஹிந்திரா! எந்த இந்திய நிறுவனமும் கையில் எடுக்காத முயற்சி!

வீடு போன்ற சகல வசதிகளைக் கொண்ட கேரவன் ரக வாகனத்தைப் பிரபல மஹிந்திரா (Mahindra) நிறுவனம் உருவாக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனம் மேற்கொள்ளாத முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் களமிறங்கியிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வீட்டைப் போல அதிக சொகுசு வசதிகள் கொண்ட கேம்பர் (Camper) வாகனத்தை மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாகனம் சொகுசு வீடுகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுக்கையறை, சமையலறை என சகல வசதிகளும் அந்த வாகனத்தில் இருக்கும். இத்தகைய சூப்பரான வாகனத்தையே மிக விரைவில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் உருவாக்கத்திற்காக ஐஐடி மெட்ராஸ் (IIT Madras)-இல் உள்ள கேரவன் உற்பத்தி நிறுவனமான கேம்பர்வேன் ஃபேக்டரி (Campervan Factory) உடன் மஹிந்திரா கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

இந்த ஒப்பந்தத்திற்கான கையொப்பம் மார்ச் 4 செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல வாகன மாடல்களில் ஒன்றான பொலிரோ பிக்-அப் ட்ரக்கே கேம்பர் வாகனமாக உருவாக்கப்பட இருக்கின்றது. இரண்டு அடுக்கில் அது காட்சியளிக்கும்.

நீண்ட தூர சுற்றுலாக்களை குடும்பத்துடன் செல்ல விரும்புவோர்களுக்கு இந்த வாகனம் நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும் என மஹிந்திரா நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது. இந்தியாவிலேயே மஹிந்திரா நிறுவனமே முதல் முறையாக இதுபோன்று ஓர் வாகன உற்பத்தியில் ஈடுபட இருக்கின்றது.

ஆகையால், இந்திய கேம்பர் வாகன பிரியர்கள் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, வாகன அலங்காரம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் வாகன மாற்றியமைக்கும் நிறுவனங்கள் மட்டுமே கேம்பர் வாகன உருவாக்கம் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

எனவே மஹிந்திராவின் கேம்பர் வாகன உருவாக்கம் பற்றிய அறிவிப்பு பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சில தனி நபர்களும் தங்களுக்கான கேம்பர் வாகனங்களை மினி வேன், பேருந்து, ஏன் சிலர் ஆட்டோக்களில்கூட வடிவமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தாங்கள் உருவாக்க இருக்கும் கேம்பர் வாகனம் ஸ்மார்ட் வாட்டர் சொல்யூஷன்ஸ், அழகான டிசைன், கம்ஃபோர்டான இன்டீரியர்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என அறிவித்துள்ளது. இதுதவிர, நான்கு பேர் வரை படுத்துறங்கும் வகையில் படுக்கை வசதி, இருக்கை அமைப்பு மற்றும் சாப்பாட்டு மேஜை உள்ளிட்டவையும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

இதுதவிர, குளியல் அறை, பயோ கழிவறை, சமையலறை, சிறிய ஃபிரிட்ஜ், குளிர்சாதனம் மற்றும் மைக்ரோஓவன் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெறும். ஆகையால், சொகுசு வசதிகள் நிறைந்த வீட்டிற்கு டஃப் கொடுக்கும் வகையில் மஹிந்திராவின் இந்த கேம்பர் வாகனம் இருக்கும் என்பது தெரிகின்றது.

பன்முக சிறப்பு வசதிகளை இந்த வாகனம் கொண்டிருப்பதால் ஏதேனும் தனி திறன் கொண்ட டிரைவர் இதற்கு தேவைப்படுமோ என எண்ண வேண்டாம். வழக்கமான கார் ஓட்டும் அனுபவம் இருந்தாலே போதும், இந்த வாகனத்தை எளிதாக இயக்கலாம். குறிப்பாக, வாகனம் ஓட்டும் ஆர்வம் இருந்தால் மிக சிறப்பான இயக்க அனுபவத்தை இந்த வாகனத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடும்பத்துடன் தங்கு தடையில்லா சுற்றுலாவை மேற்கொள்ள விரும்புவோர்க்கு நிச்சயம் இந்த வாகனம் மட்டற்ற இன்பமான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில சுற்றுலாப் பகுதிகளில் தங்குவதற்கு மற்றும் சரியான உணவு கிடைக்காத நிலைகள் தென்படுகின்றது. இந்த மாதிரியான இடங்களைக் கையாளுவதற்கு மஹிந்திராவின் இந்த வாகனம் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக