Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 மார்ச், 2022

ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை நிறுத்துவது எப்படி?

ஜிமெயில் பயனர்கள், தாங்கள் அனுப்பிய மின்னஞ்சலை 30 வினாடிகளுக்குள் தடுத்து நிறுத்த முடியும். 

சில சமயங்களில் மின்னஞ்சல்களை தவறுதலாக அனுப்பி விடுவோம். அனுப்பிய மின்னஞ்சல்களை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான இடையக நேரத்தை (buffer time) வழங்குகிறது ஜிமெயிலின் இந்த அம்சம்.

அனுப்புவதை நிறுத்து (Undo Send) என்ற அம்சம் அனைத்து பயனர்களுக்கும் இயல்பாகவே கிடைக்கும்,

அதோடு, ஜிமெயில் பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பிய 5 முதல் 30 வினாடிகளுக்குள் தவறை சரிசெய்யலாம்.

இன்றைய உலகில், அனைவரும் மின்னஞ்சல் அனுப்ப ஜிமெயிலைப் பயன்படுத்துகின்றனர். இந்த தளத்திலிருந்து மின்னஞ்சல்களை அனுப்புவது ஒப்பீட்டளவில் எளிதானது. ஆனால் பல நேரங்களில், மக்கள் அவசரமாக தவறுதலான தவறை செய்வதால், மின்னஞ்சல் வேறொருவரை சென்றடைகிறது.

ஜிமெயில் பயனர்கள் 30 வினாடிகளுக்குள் மின்னஞ்சல்களை திரும்பிப் பெற அனுமதிக்கும் இந்த அம்சம், அனைவருக்கும் பிடித்ததாக இருக்கிறது. அனுப்பிய மின்னஞ்சலை எப்படி நிறுத்துவது?

STEP 1: முதலில், ஜிமெயில் பக்கத்தில் மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானைக் (Settings icon) கிளிக் செய்யவும்.

STEP 2: இப்போது பொது தாவலைக் (General Tab) கிளிக் செய்யவும்

STEP 3: அனுப்பியதை திரும்பப்பெறும் (Undo Send) தெரிவைப் பார்க்கலாம்.  

STEP 4: இப்போது நீங்கள் நேரத்தை அமைக்க வேண்டும். இதன் இயல்புநிலை நேரம் 15 வினாடிகளாக இருக்கும்.

STEP 4: உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல, 5, 10, 20 மற்றும் 30 வினாடிகள் என நேரத்தை மாற்றி அமைக்கலாம். அதிகபட்ச பஃபர் டைம் 30 வினாடிகள்.

STEP5: இப்போது உங்கள் மின்னஞ்சல் திட்டமிடல் ச்சேமிக்கபப்ட்டது. இது உங்கள் ஜிமெயிலின் செட்டிங்கை மாற்றியமைக்கும்.  

STEP 6: இனிமேல் ​​​​நீங்கள் மின்னஞ்சலை அனுப்பும் போதெல்லாம், திரையின் இடது பக்கத்தில் ஒரு விருப்பத்தைக் காண்பீர்கள், அதில் இதற்கு முன்பு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்த விவரம் காணப்படும்.  

STEP 7: இப்போது, ​​நீங்கள் தவறுதலாக ஒருவருக்கு மின்னஞ்சலை அனுப்பியிருந்தால், செயல்தவிர் என்ற Undo தெரிவை கிளிக் செய்யலாம். இது மின்னஞ்சலை உடனடியாக திருப்பி அனுப்பும்.

டெஸ்க்டாப்பில் உள்ள ஜிமெயில் பயனர்கள் டெஸ்க்டாப்பில் திரையின் கீழ் இடதுபுறத்திலும், மொபைலில் கீழ் வலதுபுறத்திலும் மிதக்கும் கருப்புப் பெட்டியில் செயல்தவிர்க்கும் (Undo) இணைப்பைக் காணலாம்.

நேரம் முடிவதற்கு முன்பு பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்தால், அவர்களின் செய்தி செல்லாது. பயனர்கள் மின்னஞ்சலை மீண்டும் திருத்தலாம், நீக்கலாம் மற்றும் அனுப்புவதை முழுவதுமாக தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக