யூஸர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ள பெரும்பாலான ஆப்ஸ்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அப்டேட் செய்யப்படாத ஆப்ஸ்கள் என்பதும் தெரிய வந்துள்ளது
மேலும் கூகுளின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ப்ளே ஸ்டோரில் உள்ள மூன்றில் ஒரு பங்கு ஆப்ஸ்கள் நீக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது. ஆப்பிள் மற்றும் கூகுளின் நடவடிக்கைகள் காரணமாக சுமார் 15 லட்சம் ஆப்ஸ்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ஆப்ஸ்களை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நேரத்தில் கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 8,69,000 ஆப்ஸ்களை நீக்க உள்ளதாக தெரிகிறது.
கூகுள் நீக்க உள்ள ஆப்ஸ்கள் நீண்டகாலமாக செயல்படாதவை மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் டெவலப்பர்களால் ஒரு செக்யூரிட்டி அப்டேட் கூட வெளியிடப்படாதவை.
இது போன்ற சுமார் 9 லட்சம் ஆப்ஸ்களை பட்டியலிட்டுள்ள கூகுள், அவற்றை Google Play Store-ல் இருந்து அகற்றும் நடவடிக்கையை விரைவில் துவங்க உள்ளது.
ஆக்டிவில் இல்லாத ஆப்ஸ்களை கூகுள் நிறுவனம் அதன் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று யூஸர்களின் டேட்டா ப்ரொடக்ஷன்காகவே என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஏனென்றால் டெவலப்பர்கள் தங்கள் ஆப்ஸ்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை வெளியிடாததால், யூஸர்களின் பர்சனல் டேட்டா ஹேக்கர்களின் வசம் செல்ல கூடும்.
இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் பேசி இருப்பதாவது,எங்களது சமீபத்திய அம்சங்களை சப்போர்ட் செய்யாத அல்லது பல மாதங்களாக அப்டேட் செய்யப்படாத காலாவதியான ஆப்ஸ்களை, யூஸர்களின் டேட்டா பாதுகாப்பு கருதி விரைவில் நீக்க உள்ளோம் என்றார்.
அதே நேரத்தில் இது தொடர்பாக வெளியாகி உள்ள மற்றொரு அறிக்கையில், Play Store-ல் உள்ள ஆப்ஸ்கள் எவ்வளவு நாட்களாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கின்றன என்பதை பொறுத்து அந்த ஆப்ஸ்களை Play Store-ல் இருந்து தற்காலிகமாக மறைக்க அல்லது நிரந்தரமாக அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடவடிக்கை எடுக்க பட்டியலிடப்பட்டு உள்ள தற்போதுள்ள சுமார் 900,000 ஆப்ஸ்களில், ஏற்கனவே அவற்றை இன்ஸ்டால் செய்துள்ள யூஸர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அதை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூகுள் கூறி இருப்பதாக தெரிகிறது.
டெவலப்பர்கள் தங்கள் ஆப்ஸ்களை அப்டேட் செய்ய போதுமான நேரத்தை கூகுள் வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது. நீண்ட மாதங்களாக அப்டேட் செய்யாமல் விட்ட டெவலப்பர்கள் தங்கள் ஆப்ஸ்களை வரும் நவம்பர் 1, 2022-க்குள் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் காலக்கெடுவை கூகுள் நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக