இந்தியப் பெண்களின் பாரம்பரிய உடை, பெண்களை மிகவும் அழகானவராக, நேர்த்தியானவராக காட்டும் உடை சேலை மட்டுமே. அதே சமயம், ஏதோ ஒரு சேலையை தேர்வு செய்து உடுத்தினால், நம்மை அது அழகாக காட்டிவிடும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். உங்கள் உடல் உருவம், நிறம், உயரம், உடல் வாகு ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் புடவையை தேர்வு செய்ய வேண்டும்.
மெட்டீரியல் தேர்வில் கவனம் செலுத்தவும் :
உங்களுக்கு பொருத்தமான சேலையை தேர்வு செய்யும் போது, மெட்டீரியல் மீது நீங்கள் கண் வைக்க வேண்டும். உங்கள் பொலிவான தோற்றத்தில் தென்பட வேண்டும் என்று விரும்பினால் சிஃப்பான் மற்றும் ஜார்ஜெட் போன்ற மெட்ரீயல்களில் செய்யப்பட்ட உடைகளை தவிர்க்க வேண்டும்.
காஞ்சிவரம், டஸ்ஸார் அல்லது பனராஸ் போன்ற இடங்களில் தயாரான சேலைகள் அல்லது கைத்தறி புடவைகள் போன்றவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்தப் படவைகள் பார்ப்பதற்கு மெது மெதுவென்ற உணர்வை தருவதோடு, உங்கள் இடுப்புக்கு கீழே அழகான தோற்றத்தை தருகின்றன.
சரியான ஷேட் தேர்வு செய்ய வேண்டும் :
நீங்கள் தேர்வு செய்யும் புடவையில் ஒரு பிரம்மாண்ட லுக் கிடைக்க வேண்டும் என்றால் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், ஊதா போன்ற நிறங்களில் ஷேட் கொண்ட புடவைகளை தேர்வு செய்யுங்கள். இது தவிர வெளிர் பச்சை அல்லது பிரகாசமான நியான் அல்லது வெள்ளை ஆகிய ஷேட்களும் கூட உங்கள் சேலையை அழகாகக் காட்டும்.
பெரிய பிரிண்ட் மற்றும் பார்டர் அவசியம் :
பெரிய பிரிண்ட்கள் அல்லது பார்டர்களை கொண்ட புடவையை அணியும் போது அவை உங்களை நேர்த்தியானவராகக் காட்டும். நூல் எம்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடு, முத்துக்கள், அலங்காரங்கள் போன்றவை இடம்பெற்றால் நல்ல ஃபேஷன் கொண்ட உடையை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள் என்பது உறுதியாகும். சுற்றியுள்ள அனைவரின் பார்வையும் உங்கள் மீது திரும்பும்.
பிளவுஸ் தேர்வு முக்கியமானது :
சேலைக்கு மேட்ச்சான பிளவுஸ் அமைப்பது தான் இருப்பதிலேயே டாப்பான விஷயம். பிளைன் சேலை என்றால், அதே நிறத்தில் பிளவுஸ் அமைய வேண்டும். அதுவே பார்டர் வைத்த சேலை அல்லது பட்டுச் சேலை என்றால், அந்தக் கறைக்கு தகுந்தாற்போல பிளவுஸ் தேர்வு செய்ய வேண்டும். இப்போதெல்லாம் பெரும்பாலும் புடவையுடன் அட்டாச் செய்யப்பட்ட பிளவுஸ்கள் வருகின்றன. இருப்பினும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஒன்றையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
உள்பாவாடை தேர்வு :
நீங்கள் சிலிம்மாகவும், நலினம் மிகுந்தவராகவும் காட்சியளிக்க வேண்டும் என்றால் ஃபிஷ் கட் உள்பாவாடையை பயன்படுத்த வேண்டும். பிரம்மாண்ட தோற்றத்தில் காட்சியளிக்க விரும்பினால் கனமான மெட்டீரியலில் தயாரான உள்பாவாடையை தேர்வு செய்ய வேண்டும்.
ஹீல்ஸ் அணியவும் :
சரியான புடவைக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை ஹீல்ஸ் தேர்வுக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் சாதாரண காலணிகளை அணியும்போது உங்கள் நடையும் சாதாரணமாகவே இருக்கும். அதுவே ஹீல்ஸ் அணிந்து வந்தால் ஒய்யாரமாகவும், நலினமாகவும் காட்சியளிக்கும்.
சரியான முடி அலங்காரம் :
ஆம், புடவைக்கு ஏற்றபடி நம் முகத்தையும், முடியையும் அலங்காரம் செய்து கொள்வது முக்கியமானது. நீங்கள் ஃபேஷனான சேலை உடுத்தும்போது கூந்தலை கொண்டை போட்டுக் கொள்ளலாம். பார்ட்டிகளுக்கான சேலை அணியும்போது ஃப்ரீ ஹேர் நல்ல தோற்றத்தை கொடுக்கும். பட்டுப் புடவை கட்டியிருந்தால் கொஞ்சம் தளர்வாக முடியை பின்னிக் கொள்ளலாம்.
கூடுதல் அணிகலன்கள் :
நீங்கள் செல்லும் இடம், தேர்வு செய்துள்ள புடவை ஆகியவற்றுக்கு மேட்சான வாட்ச், வளையல்கள், நகைகள், ஹேண்ட் பேக் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக