பாலியல் தொந்தரவு பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் செல்லும் பொது இடங்கள், ரயில், பேருந்து என்று எல்லா இடங்களிலும், அலுவலக பெண்கள் பாலியல் தொந்தரவை எதிர்கொண்டு வந்துள்ளனர். உங்களிடம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பாலியல் தொந்தரவு ஏற்பட்டதைப் பற்றி யாரேனும் பகிர்ந்த செய்தியையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அலுவலகத்தில் தன்னுடைய மேலதிகாரியோ அல்லது சக ஊழியரோ தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என்பதை பற்றி பல பெண்கள் நெருக்கமானவர்களிடம் அல்லது ஒரு சிலரிடம் மட்டுமே தெரிவித்து இருப்பார்கள்.
ஆனால் எந்தப் பெண்ணாவது பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது பற்றி புகார் பதிவு செய்திருக்கிறாரா? அப்படி அவர் புகாராக பதிவு செய்திருந்தால் அவருக்கு அதற்கு பின்பு என்ன நேர்ந்தது? அலுவலகத்தில் ஒரு நபரின் மீது பாலியல் தொந்தரவு புகாரைப் பதிவு செய்த பெண் அதே அலுவலகத்தில் தொடர்ந்து வேலை செய்தாரா?
தன்னுடைய சக ஊழியர்களால் முன்பு போல அவர் இயல்பாக காணப்பட்டாரா? அவரை மற்றவர்கள் உதாசீனம் செய்தார்களா அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டாரா? இதைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு சந்தித்த மற்ற பெண்கள் புகார் கொடுக்க முன்வந்தார்களா? இப்படி பாலியல் தொந்தரவை எதிர்கொள்ளும் பல பெண்களுக்கும் அதற்கான தீர்வு என்ன என்று யோசிக்கும்போது இவ்வளவு கேள்விகள் எழுகின்றன.
பாதுகாப்பான பணி இடங்கள் தலைப்பில் 2019 ஆம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 27 சதவிகித பெண்கள் ஏதோ ஒரு வகையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை யாரேனும் ஒருவரால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று கணக்கெடுப்பில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்திருந்தனர். கணக்கெடுப்பில் கலந்து கொண்ட பெண்கள் பற்றிய எல்லா விவரங்களும் ரகசியமாக இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், 62 சதவிகித பங்கேற்பாளர்கள் தங்களை துன்புறுத்திய நபர் பற்றி அல்லது அவருடைய டெஸ்டினேஷன் பற்றி எந்தவித தகவலையும் கூறுவதற்கு மறுத்துவிட்டார்கள்.
பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்து கொள்ளும் ஒரு நபர் மீது புகார் பதிவு செய்வது என்பது கடினமான விஷயம் ஒன்றும் கிடையாது. அது மட்டுமின்றி வேலை செய்யும் பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவிகித பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை சம்பந்தப்பட்ட அனைத்து பாலிசிகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்.
இருந்தாலும் அத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ளும் பெண்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கு தயங்குகிறார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பாலியல் தொந்தரவு எதிர்கொண்ட அலுவலகத்தில் தொடர்ந்து வேலை செய்வ விரும்பவில்லை அல்லது வேலை செய்யலாமா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கின்றனர்.
பெண்களின் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் தெரிவிக்க முன் வர மறுக்கிறார்கள் என்பதற்கு மூன்று காரணங்கள் கூறப்பட்டுள்ளது
சில நேரங்களில் பாலியல் துன்புறுத்தல் புகார் மீது நடவடிக்கை எடுப்பதே அதன் பிரச்சனையாக நீடிக்கிறது என்று பல பெண்கள் கருதுகிறார்கள். உண்மையை பேச வேண்டும் என்பதே பெண்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி கொண்டிருக்கும் பொழுது, இத்தகைய புகாரை மேற்கொள்ளும் பொழுது அவர் மீது இவர்தான் பாலியல் துன்புறுத்தல் புகார் செய்தவர், இவர் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர் என்ற ஒரு பார்வை விழுகிறது. இதில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படும் பொழுது, அவருக்கு சக ஊழியர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்காத போது, புகாரே பிரச்சனையாக மாறுகிறது.
பாலியல் துன்புறுத்தல் புகாரில் பாதிக்கப்பட்ட நபரின் ஆழமான வலியைப் பகிர வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பொழுது அது அவருடைய உணர்வுகளை, மன நலத்தை மிகவும் தீவிரமாக பாதிக்கிறது. சில வாரங்கள் முதல் வருடங்கள் கூட அதன் தாக்கம் இருக்கும். தீவிரமான மன உளைச்சல், நாட்பட்ட படபடப்பு, பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும். புகார் தெரிவிக்கப்படும் இன்டெர்னல் கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ன நடந்தது என்பதைப்பற்றி கேட்கும்பொழுது பாதிக்கப்பட்ட பெண் தனக்கு ஏற்பட்ட வலியை விவரிக்க முற்படும் பொழுது அது மேலும் காயப்படுத்துகிறது.
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு சிறு வார்த்தை கூட அந்த பாதிப்பை மிகவும் தீவிரமாகும். முறைகேடான கேள்விகளை கேட்டு மேலும் காயப்படுத்துகிறார்கள். ஒரு சில நேரங்களில் இன்டெர்னல் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர்கள் நடந்த சம்பவத்தை பற்றிய முறைகேடான அல்லது அருவருப்பான கேள்விகளை கேட்கிறார்கள். என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வது அவசியம் தான்.
ஆனால் அதற்கு கேட்கப்படும் கேள்விகள் பாதிக்கப்பட்ட பெண்ணை காயப்படுத்தாமலும் முறைகேடான வழியிலும் இருக்கக்கூடாது. ஒரு பெண் தனக்கு நடந்த பாதிப்பை வெளியே சொல்லும் அளவுக்கு அவருக்கு பாதுகாப்பான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்பெண்ணின் உணர்வுகளை காயப்படுத்தாத அளவுக்கு கேள்விகளும் அதன் வார்த்தைகளும் இருக்க வேண்டும்.
இதையெல்லாம் கடந்தும் ஒரு பெண் தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலை புகாராக தெரிவித்து இருக்கிறார் என்றால் அவர்கள் பின்வரும் நெருக்கடிகளை எதிர் கொள்கிறார்.
முதலாவதாக புகார் அளித்த பெண்ணின் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த நடவடிக்கை அவர்களுக்கான வாய்ப்பில், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றின் மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ அவருக்கு வழங்காமல் மறுக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் உடன் இருக்கும் நண்பர்களும் அவரிடம் இருந்து விலகிச் செல்கிறார்கள். சில நேரங்களில் பெண்ணுக்கு நியாயம் கிடைக்காமல் அவருடைய நேரமும் பணமும் விரயமாகிறது. அதுமட்டுமில்லாமல் புகார் அளித்த பெண்ணை மறைமுகமாக வேலையை விட்டு நிறு வனத்தை விட்டு நீங்க செல்லும் அளவுக்கு நெருக்கடி வழங்கப்படுகிறது.
சக ஊழியர்களின் நடவடிக்கை. ‘இந்த பிரச்சனையில் நான் எதற்கு சிக்கிக் கொள்ள வேண்டும்’ என்ற கண்ணோட்டத்தில் சக ஊழியர்கள் புகார் அளித்த பெண்ணிடம் இருந்து விலகிச் செல்கிறார்கள். மேலும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை.
பாலியல் துன்புறுத்தல் புகார் மீது உடனடியாக தீர்வு கிடைக்காது. இதற்கு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக