2014ம் ஆண்டு ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவால் கையகப்படுத்தப்பட்டதில் இருந்தே ‘வாட்ஸ்அப்’ பல்வேறு வகையிலும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. சாட்டிங், வீடியோ கால், வாய்ஸ் கால், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்து கொள்வது போன்ற பல்வேறு தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்திவரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் தன்னுடைய சேவையை வாட்ஸ்அப் மேம்படுத்தி வருகிறது.
கடந்த மாதம் கூட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் மெசேஜ்களுக்கு இமோஜிக்கள் மூலமாக எதிர்வினை ஆற்றும் வசதியையும், காலில் 30 பேர் வரை இணைத்து பேசக்கூடிய வசதி, குழு அட்மின்களுக்கு குழுவில் பகிரப்படும் எந்த ஒரு செய்தியையும் நீக்கும் சிறப்பு அதிகாரம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.
தனிப் பயனர்களுக்கு மட்டுமின்றி பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்காகவும் புதிய அப்டேட்களை விரைவில் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட உள்ளது.
வாட்ஸ் அப் பிசினஸ் யூசர்களுக்காக 'வாட்ஸ்அப் பிரீமியம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அதிக ஷாப்பிங் மற்றும் வணிகத்தை மையமாகக் கொண்ட அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
மெட்டாவில் நடைபெற்ற உரையாடல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க் "எந்தவொரு வணிகமும் அல்லது டெவலப்பரும் எங்கள் சேவையை எளிதாக அணுகலாம், வாட்ஸ்அப்பில் API ஹோஸ்ட் மூலமாக நேரடியாக தங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் எங்கள் பாதுகாப்பான வாட்ஸ்அப் கிளவுட்டைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பதிலளிக்கும் நேரத்தை விரைவுபடுத்தலாம்” என தெரிவித்துள்ளார்.
.
வணிகங்கள் தங்கள் அமைப்புகளை இணைப்பதற்கும், வாடிக்கையாளர்களுடன் சேவை தொடர்பாக சாட் செய்வதற்கும் செயலி நிரலாக்க இடைமுகம் எனப்படும் API பயன்படுகிறது. ஆனால் முதன் முதலில் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பை 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிய போது, வணிகர்கள் இதன் மூலமாக மக்களுக்கு குறுச்செய்தி அனுப்ப முடியாது என அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் வணிக காரணங்களுக்காக வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது லட்சக்கணக்கான சிறு, குறு வணிகர்கள் வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட்டை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது சிறப்பு வணிக பயன்பாட்டிற்காக பிரீமியம் சேவை ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
வாட்ஸ் அப் பிசினஸ் பயணர்களுக்காக 'வாட்ஸ்அப் பிரீமியம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிசினஸை ஊக்குவிக்கும் வகையில் 10 சாதனங்களுடன் இணைக்கும் வசதியையும் வழங்கவுள்ளது. இந்த சப்ஸ்க்ரிப்ஷனிலிருந்து யூசர்கள் எப்போது வேண்டுமானாலும் விலகி கொள்ளலாம். மேலும் இந்த சேவை வாடிக்கையாளர்களுடன் பகிரக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட கிளிக்-டு-சாட் லிங்கை உருவாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவை சிறு வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக