Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஜூன், 2022

ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு? உங்களுக்கு தெரியுமா?

----------------------------------------------------
 கொஞ்சம் சிரிங்க பாஸ்..!!
----------------------------------------------------
கணவன் : ஆமா.. நம்ம தெருவுல சுத்திட்டிருக்குமே கருப்பு நாய்.. அதுக்கு இன்னைக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்தியா?
மனைவி : ஆமாங்க.. பாயாசம் வெச்சேங்க.. ஏன்?...
கணவன் : தெருமுனையில செத்துக் கிடக்குது...
மனைவி : 😏😏
----------------------------------------------------
மரியாதை...!!
----------------------------------------------------
🙋 இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் குளிர்சாதன அறைக்குள் ஏதோ வேலையாக இருந்த போது எதிர்பாராத விதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.

🙋 உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை. மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...

🙋 இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.

🙋 அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி அங்கே நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்.

🙋 அவனிடம் நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது? என்று கேட்டார்.

🙋 சார்! நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்... நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும், சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்.

🙋 இன்னைக்கு காலைல வணக்கம் சொன்னீங்க.. ஆனா, சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை. உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்... அப்போதான் உங்கள கண்டு பிடிச்சேன்... என்றான்.

🙋 ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம்...!
----------------------------------------------------
மனிதனின் ஆயுட்காலம் !!
----------------------------------------------------
🎎 ஒரு நாள் புத்தர் தன் சீடர்களிடம் ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?... என்று கேட்டார்.

🎎 ஒரு சீடர் எழுபது என்றார். 

🎎 மற்றொருவர் ஐம்பது என்றார்.

🎎 அனைத்துமே தவறானது என்று சொன்ன புத்தர்...

🎎 மனிதனின் ஆயுட்காலம் என்பது 'ஒரு மூச்சு விடும் நேரம்" என்று புன்னகையுடன் சொன்னார்.

🎎 ஆச்சரியம் கொண்ட சீடர்கள் மூச்சு விடும் நேரம் என்பது கணப்பொழுது தானே? என்றனர்.

🎎 அதற்கு புத்தர் 'மூச்சு விடும் நேரம் என்பது கணப்பொழுது" என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கை என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது. 

🎎 ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும். அந்த கணத்தில் முழுமையாக வாழ வேண்டும் என்றார்.

🎎 பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலேயே மூழ்கியிருக்கிறார்கள்...

🎎 பலர் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும், கவலையிலும் வாழ்கிறார்கள்...

🎎 நிகழ்காலம் மட்டுமே நம் ஆளுகைக்கு உட்பட்டது. அதை நாம் முழுமையாக வாழ வேண்டும் என்று கூறினார் புத்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக