உலகெங்கிலும் மக்கள் தங்களது மதம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றை பொறுத்து விதவிதமான திருமண சடங்குகளை பின்பற்றி வருகின்றனர்.
அதில் சில சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள் நம்மை மிரளவைப்பதாகவும், ஆச்சர்யப்படுத்துபவையாகவும், சில நம்மை பயப்படுத்தும் வகையிலும் இருக்கலாம்.
உலகம் முழுவதும் தினந்தோறும் நடத்தப்படும் திருமணங்களில் அப்படி என்ன மாதிரியான விநோதமான சடங்குகள் மற்றும் மரபுகள் பின்பற்றப்படுகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்...
ஜூட்டா சுபாய் சடங்கு:
இந்தியத் திருமணங்களில் இது குறும்புத்தனமான சடங்கு ஆகும். திருமணத்தின் போது மணமகனின் காலணியை மணமகளின் சகோதரன் மற்றும் சகோதரிகள் இணைந்து மறைத்துவைத்துவிடுவார்கள்.
காலணியை அவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றால் தனது மச்சினன் அல்லது மச்சினிக்கு மணமகன் பணம் கொடுக்க வேண்டும்.
மரத்துடன் திருமணம்:
செவ்வாய் தோஷம் அல்லது நாக தோஷம் இருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் தனது திருமணத்திற்கு முன்னதாக ஒரு வாழை மரத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த மரத்தை வெட்டி விடுவார்கள்.
இது எதற்கு என்றால் தோஷம் உள்ள பெண்ணை மணக்கும் கணவர் இறந்துவிடுவார் என்பதால், வாழை மரத்தை முதலில் மணமகனாக பாவித்தி திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த மணமகன் இறந்து போனதாக காட்ட, அதனை வெட்டி விடுவது சம்பிரதாயம் ஆகும்.
அழுகை சடங்கு:
இது நீங்கள் நினைப்பது போல் ஆனந்த கண்ணீர் விடுவது அல்ல, சீனாவில் ஒரு சில பகுதிகளில் திருமணத்திற்கு முன்பு மணமகள் கண்ணீர் விட்டு அழுவது ஒரு சடங்காகவே பின்பற்றப்படுகிறது. இந்த சடங்கின் படி, திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக சீன முறைப்படி துஜியா என அழைக்கப்படும் மணமகள், தினமும் ஒவ்வொரு மணி நேரம் அழ வேண்டும்.
முகம் மற்றும் உடலில் கருப்பு நிறம் பூசுவது:
ஸ்காட்லாந்தில் ஒரு பாரம்பரியம் உள்ளது, திருமணத்திற்கு முன்னதாக மணமகனும், மகளும் முகம் மற்றும் உடல் பகுதிகளில் கருப்பு நிறம் பூசப்பட்டு, தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த சடங்கு மணமக்களை தீய ஆவிகளிடம் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது.
எஞ்சிய உணவை சாப்பிடுவது:
பிரஞ்சு பழக்க வழக்கங்களின்படி, புதுமணத் தம்பதிகளுக்கு திருமணத்தின் போது மீதமான உணவு மற்றும் பானங்களை ஒரு பானையில் போட்டு கலந்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதன் மூலம் முதலிரவை சிறப்பாக கொண்டாடுவதற்கான சக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது. தற்போது இந்த வழக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு மணமக்களுக்கு சாக்லெட் மற்றும் ஷாம்பெயின் வழங்கப்படுகிறது.
3 நாளைக்கு குளிக்க கூடாது:
மலேசியா, இந்தோனேசியா, போர்னியோவில் பகுதிகளில் வசிக்கும் டிடாங் இன மக்கள், தம்பதிகளை தொடர்ந்து 3 நாட்களுக்கு பாத்ரூமை பயன்படுத்த தடை விதிக்கின்றனர். இதனை தம்பதிகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதால், காவல் ஏற்பாடுகள் வேறு தீவிரமாய் இருக்குமாம். இது புதுமண தம்பதிக்கு அதிர்ஷ்டம் மற்றும் குழந்தைப்பேறு கொடுக்க உதவும் என நம்பப்படுகிறது.
மணமகளை முத்தமிடுதல்:
ஸ்வீடனில் ஒரு விசித்திரமான திருமண பாரம்பரியம் உள்ளது, திருமணத்தில் பங்கேற்கும் அனைத்து இளைஞர்களும், திருமணமாகாத ஆண்களும் மணமகளை முத்தமிட அனுமதி அளிக்கப்படுகிறது.
திருமண நாளில் சிரிக்க தடை:
திருமணம் என்பது வாழ்நாளிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். அன்றைய தினம் மணமகனும், மணப்பெண்ணும் சிரித்த முகத்துடன் இருப்பதை தான் பார்த்திருப்போம், ஆனால் காங்கோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் திருமண நாளான்று புதுமண தம்பதி சிரிக்க கூடாது என்ற தடை உள்ளது.
பீங்கான் தட்டுக்களை உடைத்து நெறுக்குவது:
கிரீஸ் நாட்டு திருமணங்களில் நடக்கும் மிகவும் விளையாட்டான சடங்கு இது. கிரீஸ் மக்கள் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் தீய சக்திகளை ஈர்க்கும் என நம்புகின்றன. எனவே திருமண நாளான்று புதுமண தம்பதி பீங்கான் தட்டுக்களை ஆக்ரோஷமாக தூக்கிப்போட்டு உடைக்க வைப்பது வழக்கம். இதனால் தீய சக்திகள் திருமணத்தை கொண்டாட்டமாக நினைக்காது என அவர்கள் நம்புகிறார்கள்.
மணமகனின் கால்களில் அடிப்பது:
ஃபலாகா, அல்லது பழைய கரும்பு அல்லது உலர்ந்த மீனால் மணமகனின் கால்களை அடிக்கும் சடங்கு ஆகும். இது பொதுவாக மணப்பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்பும் முன்பு செய்யப்படுகிறது.
மணமகள் மீது எச்சில் உழிழ்வது:
கென்யாவின் மசாய் இனத்தில் திருமணத்தின் போது மணப்பெண்ணின் தந்தையை அவளது தலை மற்றும் மார்பு பகுதியில் எச்சில் துப்பும் சடங்கு பின்பற்றப்படுகிறது. இது பெண்ணின் சகிப்புத் தன்மையை சோதிக்க கூடியது. அதாவது கணவன் வீட்டிற்கு செல்லும் பெண் எக்காரணம் கொண்டு தந்தை வீட்டிற்கு திரும்ப வரக்கூடாது என்பதற்காக செய்யப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக