புரட்டாசி 08 - திங்கட்கிழமை
🔆 திதி : அதிகாலை 04.02 வரை தசமி பின்பு ஏகாதசி.
🔆 நட்சத்திரம் : காலை 09.12 வரை உத்திராடம் பின்பு திருவோணம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.03 வரை அமிர்தயோகம் பின்பு காலை 09.12 வரை மரணயோகம் பின்பு அமிர்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 திருவாதிரை
பண்டிகை
🌷 ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமான் சந்தன மண்டபத்தில் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
🌷 சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
வழிபாடு
🙏 பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 திருவோணம்
💥 ஏகாதசி
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌟 விதை விதைப்பதற்கு உகந்த நாள்.
🌟 வழக்குகளை ஆரம்பிப்பதற்கு நல்ல நாள்.
🌟 புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 07.17 PM முதல் 09.00 PM வரை
ரிஷப லக்னம் 09.01 PM முதல் 11.03 PM வரை
மிதுன லக்னம் 11.04 PM முதல் 01.14 AM வரை
கடக லக்னம் 01.15 AM முதல் 03.23 AM வரை
சிம்ம லக்னம் 03.24 AM முதல் 05.26 AM வரை
கன்னி லக்னம் 05.27 AM முதல் 07.32 AM வரை
துலாம் லக்னம் 07.33 AM முதல் 09.38 AM வரை
விருச்சிக லக்னம் 09.39 AM முதல் 11.50 AM வரை
தனுசு லக்னம் 11.51 AM முதல் 01.57 PM வரை
மகர லக்னம் 01.58 PM முதல் 03.51 PM வரை
கும்ப லக்னம் 03.52 PM முதல் 05.33 PM வரை
மீன லக்னம் 05.34 PM முதல் 07.12 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━
இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்
கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமிர்த்தமான சில நுட்பங்களை அறிவீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : மேன்மை ஏற்படும்.
பரணி : தெளிவு பிறக்கும்.
கிருத்திகை : ஆதரவு மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வருமானத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அசதிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பழுப்பு
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : சந்திப்பு ஏற்படும்.
மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.
---------------------------------------
மிதுனம்
பணிகளில் திறமைக்கான மதிப்பு தாமதமாகக் கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாகக் கிடைக்கும். இழுபறியான சில பணிகள் நிறைவுபெறும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மிருகசீரிஷம் : பேச்சுக்களைத் தவிர்க்கவும்.
திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கடகம்
சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஆதரவு மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : ஆதரவு மேம்படும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விருந்தினர்களின் வருகை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : மதிப்பு உயரும்.
உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
கன்னி
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றத்தில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : அனுபவம் அதிகரிக்கும்.
விசாகம் : ஆர்வமின்மை குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
மாறுபட்ட அணுகுமுறையைக் கையாளுவீர்கள். சொத்து விற்பது மற்றும் வாங்குவதில் லாபமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். பணி நிமிர்த்தமான உதவி கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுமக்கள் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும். தடைகள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
விசாகம் : லாபமான நாள்.
அனுஷம் : மதிப்பு மேம்படும்.
கேட்டை : ஆதரவான நாள்.
---------------------------------------
தனுசு
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். இழுபறியான சில வரவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் மேம்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூராடம் : அனுபவம் ஏற்படும்.
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
மகரம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். எதிலும் திருப்தியில்லாத சூழல் அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : மாற்றம் ஏற்படும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தவறிய சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த ஒப்பந்த பணிகள் சாதகமாகும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அவிட்டம் : பக்குவம் உண்டாகும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
---------------------------------------
மீனம்
அலுவலகப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக