தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழ துண்டுகள் - 1 கப்
தக்காளி - 2
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மல்லித்தளை - 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க
நல்ல மிளகு - 1 தேக்கரண்டி
ஜீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4
தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, - 1 தேக்கரண்டி
பெருங்காயம் தூள் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
அரைக்க தேவையான பொருட்களை எடுத்து அரைத்துக் கொள்ளவும்
பின்பு அரை கப் அன்னாசிப்பழ துண்டுகளை மிக்ஸி ஜாரில் எடுத்து
விழுதாக அரைத்துக்கொள்ளவும்
1 தக்காளியை 1 கப் தண்ணீரில் நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்
பின்பு அதில் உப்பு அன்னாசிப்பழ விழுது மற்றும் மஞ்சள் தூள் ரசப்பொடி சோ்க்கவும்
பின்பு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்
பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்
பின்பு மீதமுள்ள நறுக்கிய தக்காளி மற்றும் அன்னாசிப்பழம் சோ்க்கவும்
மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும்
தண்ணீா் சோ்க்கவும்
வேகவைத்த துவரம்பருப்பை சோ்க்கவும்
மல்லிதளை சோ்க்கவும்
ரசம் சூடானதும் தீயை அணைத்து விடவும்
இப்போது சுவையான அன்னாசிப் பழ ரசம் ரெடி!!!!!!!!
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக