Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 அக்டோபர், 2023

03-10-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

புரட்டாசி 16 - செவ்வாய்க்கிழமை

🔆 திதி : காலை 10.30 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.

🔆 நட்சத்திரம் : இரவு 10.57 வரை கிருத்திகை பின்பு ரோகிணி.

🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.04 வரை மரணயோகம் பின்பு இரவு 10.57 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 அஸ்தம், சித்திரை 

பண்டிகை

🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

🌷 திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் பவனி வரும் காட்சி.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

🌷 திருப்பரங்குன்றம் ஆண்டவர் வாகனத்தில் புறப்பாடு.

வழிபாடு

🙏 முருகரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 கிருத்திகை விரதம்

💥 கரிநாள்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கடன்களை கட்டுவதற்கு ஏற்ற நாள்.

🌟 மருந்து உண்ணுவதற்கு உகந்த நாள்.

🌟 பயனற்ற மரங்களை வெட்டுவதற்கு ஏற்ற நாள்.

🌟 ஹோமம் செய்வதற்கு உகந்த நாள்.

லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

மேஷ லக்னம் 06.46 PM முதல் 08.29 PM வரை 

ரிஷப லக்னம் 08.30 PM முதல் 10.31 PM வரை 

மிதுன லக்னம் 10.32 PM முதல் 12.43 AM வரை 

கடக லக்னம் 12.44 AM முதல் 02.52 AM வரை 

சிம்ம லக்னம் 02.53 AM முதல் 04.55 AM வரை 

கன்னி லக்னம் 04.56 AM முதல் 07.00 AM வரை 

துலாம் லக்னம் 07.01 AM முதல் 09.07 AM வரை 

விருச்சிக லக்னம் 09.08 AM முதல் 11.19 AM வரை 

தனுசு லக்னம் 11.20 AM முதல் 01.26 PM வரை 

மகர லக்னம் 01.27 PM முதல் 03.19 PM வரை 

கும்ப லக்னம் 03.20 PM முதல் 05.01 PM வரை 

மீன லக்னம் 05.02 PM முதல் 06.41 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்

குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் வழியில் விரயங்கள் ஏற்படும். உபரி வருமானம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். 

பரணி : வருமானம் மேம்படும்.

கார்த்திகை : சாதகமான நாள்.
---------------------------------------
ரிஷபம்

பழைய விஷயங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவுகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும். மந்தமான நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 


கார்த்திகை : பொறுமையுடன் செயல்படவும். 

ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.

மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.
---------------------------------------
மிதுனம்

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு வந்த ஒப்பந்தப் பணிகள் சாதகமாகும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 


மிருகசீரிஷம் : பக்குவம் உண்டாகும். 

திருவாதிரை : ஒப்பந்தங்கள் சாதகமாகும். 

புனர்பூசம் : நெருக்கடிகள் மறையும்.
---------------------------------------
கடகம்

அலுவலகப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தனவரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். பரிசுகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூசம் : மாற்றமான நாள்.

ஆயில்யம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைபட்ட சில வேலைகள் நிறைவுபெறும். விலகிச் சென்றவர்கள் சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். புகழ் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 


மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : ஆதாயம் உண்டாகும். 

உத்திரம் : புதுமையான நாள்.
---------------------------------------
கன்னி

நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சோதனை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 


உத்திரம் : மதிப்பு மேம்படும்.

அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

சித்திரை : காரியங்கள் நிறைவேறும்.
---------------------------------------
துலாம்

சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். எண்ணிய பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நம்பிக்கை மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 


சித்திரை : அனுசரித்துச் செல்லவும். 

சுவாதி : கையிருப்புகள் குறையும். 

விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும். 
---------------------------------------
விருச்சிகம்

சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில் சில மாற்றமான சூழல் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும். 

கேட்டை : மாற்றமான நாள்.
---------------------------------------
தனுசு

தனவரவு ஓரளவு இருக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குருமார்களின் சந்திப்பு ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உத்தியோக பணிகளில் ஆர்வம் ஏற்படும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு


மூலம் : சந்திப்பு ஏற்படும். 

பூராடம் : ஆர்வம் உண்டாகும். 

உத்திராடம் : அனுபவம் அதிகரிக்கும். 
---------------------------------------
மகரம்

உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


உத்திராடம் : புரிதல் உண்டாகும். 

திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும். 

அவிட்டம் : மதிப்பு மேம்படும். 
---------------------------------------
கும்பம்

நினைத்த சில காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பணிகளில் இழுபறியான சில வேலைகள் முடியும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 

 
அவிட்டம்: அலைச்சல்கள் ஏற்படும். 

சதயம் : லாபம் அதிகரிக்கும். 

பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும். 
---------------------------------------
மீனம்

சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சோர்வு விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

உத்திரட்டாதி : ஆதரவான நாள்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக