கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முதலில் உங்கள் இணைய உலாவியில் இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்
கீழே தோன்றும் Option- களில் "புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம்" என்பதை தேர்வு செய்யவும்.
பிறகு குடும்ப தலைவர் பெயர், கணவர்/தந்தை பெயர், உங்கள் வீட்டு முகவரியை ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்தப் புகைப்படத்தின் அளவு (Size) 5 MB மிகாமலும், புகைப்படம் JPEG, JPG, PNG பார்மேட்டில் (Format) இருக்க வேண்டும்.
மாவட்டம், மண்டலம், கிராமம் மற்றும் தொலைபேசி எண் என அனைத்து தகவலையும் பதிவிட வேண்டும்.
பிறகு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர் மற்றும் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
பிறகு உங்களுக்கான அட்டையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
குடியிருப்பு சான்றுக்கான ஏதாவது ஒரு ஆவணத்தை நீங்கள் பதிவேற்ற செய்ய வேண்டும்.
மின்சார கட்டண ஆவணம், வங்கி கணக்கு புத்தகம் முன்பக்கம், கேஸ் புத்தகம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் ஒன்றை நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து தகவலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு அதே போல் கேட்கப்பட்ட ஆவணத்தை பதிவேற்றம் செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
புகைப்படத்தில் உள்ள இரண்டு ஆப்ஷனையும் select செய்த பின்னர் பதிவு செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக