பொடி பிஞ்சு கத்தரிக்காய் 15 முதல் 20
புளி - ஒரு சிறிய துண்டு
உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
கட்டிப்பெருங்காயம் - 1 சிறிய துண்டு
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வத்தல் - 8
தேங்காய் எண்ணெய்/சமையல்எண்ணெய் - 4தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் கொத்தமல்லி விதை பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும்
வறுத்ததை 3/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து மிக்ஸியிலிட்டு கரகரப்பாக திரிக்கவும்
கத்தரிக்காயைச் காம்பை நீக்கி விட்டு அடிபுறத்தில் நான்காக கீறிக்கொள்ளவும் . தனி துண்டுகளாக நறுக்கக்கூடாது. முழுதாகவும் இருக்க வேண்டும் நான்காக வகுந்தும் இருக்க வேண்டும்
கடாயில் புளியை நீர்க கரைத்து 3/4 தேக்கரண்டி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஒரு கொதிவிடவும்
கீறிய கத்தரிக்காயைச் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை மூடி அடுப்பில்வைக்கவும்
கத்தரிக்காய் குழைய கூடாது . ஆனால் பாதிக்கு மேல் வெந்திருக்க வேண்டும்
வெந்த கத்தரிக்காயை தண்ணீர் இல்லாமல் எடுத்து ஆற விடவும்
மிக்ஸியில் பொடி செய்ததை கத்தரிக்காயின் கீறிய பகுதியை பிரித்து அடைத்து பின் சேர்த்து ஒரு தட்டில் தனியாக வைக்கவும்
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
ஒவ்வொரு கத்தரிக்காயாக கடாயில் அடுக்கி சிறிது நேரம் கழித்து கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும் . இரும்பு கடாயில் நன்றாக வரும். சீக்கிரமே செயயய்யலாம் முறுமுறு என்றும் இருக்கும்
கத்தரிக்காய் எண்ணெய்யில் நன்றாக பொரிந்து முறுமுறு என்று ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தயார். மோர்க்குழம்புடன் சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்
எனது டிப்:பொடியை மொத்தமாகவும் செய்து எந்த காய்க்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக