காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாக உணவு சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை (ஸ்வீட் ) சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை ( முகத்தை ) மூடிக்கொண்டு இறுக்கமாக தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு அதிக வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. யாரிடமும் பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.....
இந்த 5 வழிகளைக் கடைப்பிடித்தால் நீங்களும் (உங்கள் மூளை )சுறுசுறுப்பாகச் செயல்படலாம்.
1) காலை உணவைக் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
காலையில் நாம் சாப்பிடும் உணவு அந்த நாளைத் தொடங்குவதற்கான சக்தியைக் கொடுக்கிறது. வேலைக்குப் புறப்படும் அவசரத்தில் சிலர் எதோ ஒப்புக்காக ஒரு துண்டு ரொட்டியைச் சாப்பிடுவது உண்டு. முழுமையான சத்துக்களைக் கொண்ட தானியங்கள், பழங்கள், முட்டைகள், நல்ல கொழுப்பு வகைகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.
2) மற்றவர்களுடன் உரையாடுவதில் கவனம் செலுத்துங்கள்
மற்றவர்களுடன் எப்போதும் கலகலப்பாகப் பழகினால் உடல் சோர்வு நமக்குத் தெரியாது. ஆனால் சிலருக்குப் புதுமுகங்களுடன் பழகுவது பதற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்றால், பிறருடன் பழகுவதில் கவனம் செலுத்துங்கள். நாளடைவில் பதற்றம் ஓடிவிடும், உங்களுக்கும் சோர்வு குறைந்துவிடும்
3) காலையில் உங்கள் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுங்கள்
வேலைக்குச் செல்வதற்கு முன் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் சுறுசுறுப்பாக இருக்க வகைசெய்யும். ஆனால் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மூளைக்கு வேலை செய்யலாம். ஓவியம் வரைவது, எழுதுவது ஆகியவற்றைச் செய்வது உடலைத் தெம்பாக வைத்திருக்கும்.
4) தண்ணீர் அருந்துங்கள்
உடலின் நீர் அளவு குறைந்தால் உடல் சோர்வடையும். பலர் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் நொறுக்குத் தீனிகளை உண்கிறார்கள். ஆனால், ஒரு நாளில் எட்டுக் குவளைகள் தண்ணீர் குடிப்பது அவசியம்.
5) தூக்கத்தைத் தள்ளிப் போடாதீர்கள்
இரவில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, திறன்பேசியைப் பயன்படுத்துவது போன்றவை நமது தூக்கத்தைப் பாதிக்கும். அதனால் இரவில் அவற்றை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு குறைந்தது எழு மணி நேரம் தூங்குங்கள்.
இவை அனைத்தும் தங்கள் மூளை சிறப்பாக செயல்பட துணைபுரியும்.
அறிந்து கொள்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக