தை 3 - புதன்கிழமை
🔆 திதி : அதிகாலை 04.15 வரை சஷ்டி பின்பு சப்தமி.
🔆 நட்சத்திரம் : காலை 09.53 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.33 வரை அமிர்தயோகம் பின்பு காலை 09.53 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 மகம்
பண்டிகை
🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் சைவ சமய வரலாற்று லீலை, இரவு தங்க மயில் வாகனத்தில் பவனி வரும் காட்சி.
🌷 திருவிடைமருதூர் ஸ்ரீசிவபெருமான் வெள்ளி சூரிய பிரபையில் பவனி வரும் காட்சி.
வழிபாடு
🙏 ராமரை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 கரிநாள்
💥 உழவர் திருநாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கலை சார்ந்த பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
🌟 பிரார்த்தனைகளை நிறைவேற்ற நல்ல நாள்.
🌟 பொது சபை கூட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌟 நோய்க்கு மருந்துண்ண சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 11.49 AM முதல் 01.32 PM வரை
ரிஷப லக்னம் 01.33 PM முதல் 03.34 PM வரை
மிதுன லக்னம் 03.35 PM முதல் 05.46 PM வரை
கடக லக்னம் 05.47 PM முதல் 07.55 PM வரை
சிம்ம லக்னம் 07.56 PM முதல் 09.58 PM வரை
கன்னி லக்னம் 09.59 PM முதல் 12.00 AM வரை
துலாம் லக்னம் 12.01 AM முதல் 02.06 AM வரை
விருச்சிக லக்னம் 02.07 AM முதல் 04.18 AM வரை
தனுசு லக்னம் 04.19 AM முதல் 06.25 AM வரை
மகர லக்னம் 06.26 AM முதல் 08.23 AM வரை
கும்ப லக்னம் 08.24 AM முதல் 10.04 AM வரை
மீன லக்னம் 10.05 AM முதல் 11.44 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவு ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் உழைப்பு மேம்படும். தாய்மாமன் வழியில் செலவு ஏற்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
அஸ்வினி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பரணி : உழைப்பு மேம்படும்.
கிருத்திகை : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் லாபம் மேம்படும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
கிருத்திகை : ஆதாயம் கிடைக்கும்.
ரோகிணி : செல்வாக்கு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் சில நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சிந்தனை திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : சாமர்த்தியம் பிறக்கும்.
திருவாதிரை : தொடர்பு கிடைக்கும்.
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
கடகம்
குடும்பத்தாரின் ஆதரவு மேம்படும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : ஆதரவு மேம்படும்.
பூசம் : திருப்தியான நாள்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
அத்தியாவசியமான செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு விமர்சன பேச்சுக்கள் தோன்றும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கான வாய்ப்பு உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : செலவுகள் அதிகரிக்கும்.
பூரம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.
உத்திரம் : வாய்ப்பு உண்டாகும்.
---------------------------------------
கன்னி
சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : ஒற்றுமை மேம்படும்.
அஸ்தம் : பொறுப்புகள் கிடைக்கும்.
சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
துலாம்
சமயோசிதமாக பேசி காரியத்தை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளின் மூலம் வரவு மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : ஒப்பந்தம் சாதகமாகும்.
சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விசாகம் : வரவு மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசாகம் : புதுமையான நாள்.
அனுஷம் : புரிதல் ஏற்படும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : மனஸ்தாபம் நீங்கும்.
பூராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : பொறுப்பு மேம்படும்.
---------------------------------------
மகரம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். அசதிகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் நிறம்
உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
கும்பம்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குழந்தைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : ஆதரவு ஏற்படும்.
---------------------------------------
மீனம்
எதிலும் படபடப்பின்றி பொறுமையுடன் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்படுவதால் மேன்மை உண்டாகும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : கவனம் வேண்டும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக