காலை உணவு ஏதாவது ருசியாக சாப்பிட வேண்டும் என நினைத்தால் இந்த இட்லி ரசம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
இட்லி -5
ரசம் வைக்க :
தனியா - 1 tsp
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 5 - 6
துவரம்பருப்பு - 1 tsp
கடலை பருப்பு - 1/2 tsp
சீரகம் - சிறிதளவு
தக்காளி - 1/2 கப்
புளி தண்ணீர் - 1/4 கப்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தே. அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
தனியா, காய்ந்த மிளகாய், மிளகு , துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். பின் மிக்ஸியில் மைய அரைத்து பொடியாக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக தக்காளி கரைத்து அதில், புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடியை சேர்த்து கலக்குங்கள்.
அடுத்ததாக உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து பூண்டை தட்டிப் போடுங்கள். கருவேப்பிலை , கொத்தமல்லி நறுக்கி போடுங்கள்.
தாளிக்க கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்றுங்கள்.
அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வையுங்கள். கொதிநிலை வந்ததும் இறக்கிவிடுங்கள். ரசம் தயார்.
பரிமாறும்போது இட்லி வைத்து அதன் மேல் ரசம் ஊற்றி கொடுங்கள். தேவைப்பட்டால் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி வைக்கலாம்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக