🔆 திதி : அதிகாலை 03.16 வரை சப்தமி பின்பு அஷ்டமி.
🔆 நட்சத்திரம் : காலை 08.31 வரை ரேவதி பின்பு அஸ்வினி.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.37 வரை மரணயோகம் பின்பு காலை 08.31 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 பூரம்
பண்டிகை
🌷 கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம்.
🌷 மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடு.
🌷 குன்றக்குடி ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி கேடயத்தில் பவனி வரும் காட்சி.
வழிபாடு
🙏 பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 வளர்பிறை அஷ்டமி
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 தானியங்கள் வாங்க உகந்த நாள்.
🌟 சாஸ்திர பயிற்சி பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
🌟 பசு தொழுவ பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
🌟 மரக்கன்றுகளை நடுவதற்கு சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 11.45 AM முதல் 01.28 PM வரை
ரிஷப லக்னம் 01.29 PM முதல் 03.30 PM வரை
மிதுன லக்னம் 03.31 PM முதல் 05.42 PM வரை
கடக லக்னம் 05.43 PM முதல் 07.51 PM வரை
சிம்ம லக்னம் 07.52 PM முதல் 09.54 PM வரை
கன்னி லக்னம் 09.55 PM முதல் 11.56 PM வரை
துலாம் லக்னம் 11.57 PM முதல் 02.02 AM வரை
விருச்சிக லக்னம் 02.03 AM முதல் 04.14 AM வரை
தனுசு லக்னம் 04.15 AM முதல் 06.21 AM வரை
மகர லக்னம் 06.22 AM முதல் 08.19 AM வரை
கும்ப லக்னம் 08.20 AM முதல் 10.00 AM வரை
மீன லக்னம் 10.01 AM முதல் 11.40 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீகம் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பணி சார்ந்த விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த சில விரயங்கள் உண்டாகும். பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் செயல்படவும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : அலைச்சல் ஏற்படும்.
கிருத்திகை : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
---------------------------------------
ரிஷபம்
தாயின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளால் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில தடைகளால் மாற்றம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
கிருத்திகை : குழப்பம் நீங்கும்.
ரோகிணி : கவனத்துடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மிதுனம்
உடல் ஆரோக்கியம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சபை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவாதிரை : லாபம் ஏற்படும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
கடகம்
சகோதரர்களின் வழியில் எதிர்பாராத செலவு உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
புனர்பூசம் : செலவு உண்டாகும்.
பூசம் : ஆதாயமான நாள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிக்கு உண்டான பலன் கிடைக்கும். பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகம் : ஆதாயம் ஏற்படும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
கன்னி
மனதில் குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பலமுறை யோசித்துச் செயல்படவும். சக வியாபாரிகளால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். நினைத்த செயல்கள் முடிவதில் அலைச்சல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : யோசித்துச் செயல்படவும்.
அஸ்தம் : கெடுபிடிகள் அதிகரிக்கும்.
சித்திரை : அலைச்சல் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த இறுக்கம் குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
சுவாதி : அறிமுகம் ஏற்படும்.
விசாகம் : பொறுப்பு கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வருமானம் தேவைக்கேற்ப கிடைக்கும். வாகன பராமரிப்பில் கவனம் வேண்டும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
கேட்டை : காரியம் கைகூடும்.
---------------------------------------
தனுசு
எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். வழக்கு சார்ந்த பிரச்சனைகள் குறையும். இளைய சகோதரர்களின் வழியில் புரிதல் ஏற்படும். கடன் சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூராடம் : சங்கடங்கள் ஏற்படும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
மகரம்
மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். குடும்ப விஷயத்தில் அலைச்சல் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த வரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : சுபமான நாள்.
திருவோணம் : வரவு கிடைக்கும்.
அவிட்டம் : பிரச்சனைகள் நீங்கும்.
---------------------------------------
கும்பம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். ஆவணம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அவிட்டம் : வேறுபாடுகள் நீங்கும்.
சதயம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தேவை அறிந்து வாக்குறுதிகளை அளிப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோக உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.
ரேவதி : உயர்வான நாள்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக