Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 மார்ச், 2025

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்

சமயபுரம் மாரியம்மன், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்கக் கூடியவள். இக்கோவில் மாசி மாதம் இறுதியில் துவங்கப்படும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தம். 

இவ்விழாவின் போது அம்மனுக்கு கூடை கூடையாக விதவிதமான பூக்கள் கொண்டு வந்து பக்தர்கள் காணிக்கையாக தருவார்கள். வழக்கமாக திருவிழா என்றால் தங்களின் துன்பங்கள், குறைகள் தீர பக்தர்கள் தான் சுவாமியிடம் வேண்டிக் கொண்டு விரதம் இருப்பார்கள். 

ஆனால் பக்தர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக அம்மனே பச்சை பட்டினி விரதம் இருக்கும் வைபவம் இக்கோவிலில் மட்டுமே நடக்கும் அற்புதமான நிகழ்வாகும். இதுகுறித்து நமது சிவசக்தி ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோவில். அம்மனின் 51 சக்தி பீடங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுவது சமயபுரம். இங்கு அம்மனே சிவ - சக்தி சொரூபமாக விளங்குவதால், பக்தர்கள் இந்த அம்மனை தாயாக நினைத்து வழிபடுகின்றனர்.

நோய்கள், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், பிரச்சனை என எந்த குறையை சொல்லி முறையிட்டாலும், நம்பிக்கையுடன் வழிபடும் பக்தர்களுக்கு சமயத்தில் வந்து காக்கும் தெய்வமாக சமயபுரம் மாரியம்மன் விளங்குகிறார். 

இக்கோவிலில் மாவிளக்கு நேர்த்திக்கடன் மற்றும் உறுப்புக்கள் உருவ பொம்மை வாங்கி உண்டியலில் செலுத்துவது முக்கிய பிரார்த்தனையாக இருந்து வருகிறது.

வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்புக்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு உண்டு. இங்கு மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மாரியம்மன் சுதை சிற்பமாக காட்சி தருவதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது. மாறாக அலங்காரங்கள் மட்டுமே செய்யப்படும். உற்சவ திருமேனிக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக