Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 29 செப்டம்பர், 2018

உலக அரங்கில் வியந்து போற்றப்படும் டாப் 10 இந்திய அரசிகள்!


இதுதான் இந்திய அரசிகள் பற்றி பேச வேண்டிய தகுந்த நேரம் என கருத தோன்றுகிறது. இந்திய வரலாற்றில் முதல்முறை இந்திய அரசி ஒருவரின் பெயர் பெரும் சர்ச்சைக்குள்ளான விவாதமாக கடந்த சில வாரங்களாக திகழ்ந்து வருகிறது.



பத்மாவதி என்ற படத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு. தவறான முறையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என ஒரு தரப்பும், அப்படி ஏதும் இல்லை என இயக்குனர் தரப்பும் வாதாடி வருகிறது. நடிகை, நடிகர், இயக்குனர் மீது வழக்குகள் ஆங்காங்கே பதிவு செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ராணி பத்மாவதி உட்பட இந்திய வரலாற்றில் முக்கிய பங்காற்றிய பல ராணிகள் இருக்கிறார்கள். ராணி என்றால் அழகுக்குரியவள் என்பதை தாண்டி, தைரியம், ஆட்சி, ஆளுமை, போர் வீரம், ஆங்கிலேயே எதிர்ப்பு என தங்கள் தடத்தை வரலாற்றில் மிக ஆழமாக பதித்து சென்ற சில அரசிகளை பற்றிய சிறிய தொகுப்பு....

சம்யுக்தா!

சம்யுக்தா கன்னூஜ் இளவரசி. இவர் ப்ரித்விராஜ் சவுகனின் மனைவி ஆவார். அழகுக்கும் அறிவுக்கும் பெயர் போனவர் ராணி சம்யுக்தா. இந்திய வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்த சிறந்த ராணிகளில் முதன்மை இடத்தை பிடித்துள்ளார். சம்யுக்தா மற்றும் ப்ரித்விராஜ் இடையே மலர்ந்த காதல் கதை வித்தியாசமானது. அந்த காலத்தில் நாடு முழுக்க சம்யுக்தாவின் அழகு மற்றும் திறமை குறித்து பலரும் வியந்து பேச ஆரம்பித்தனர். இதனால், சம்யுக்தா என்பவள் எப்படி இருப்பாள் என தெரியாமலேயே அவர் மீது காதல் கொண்டார் ப்ரித்விராஜ். இவர்களது காதல் பல தடைகளை கடந்து சுபமாக திருமணத்தில் முடிந்தது.
 
ராணி பத்மாவதி!

இன்று இந்தியாவின் பெரும் சர்ச்சைக்குரிய பெயராக திகழ்ந்து வருகிறது. இதற்கு முன் அறியாதவர்களும் தேடி,தேடித் படித்து வருகிறார்கள். ராணி பத்மாவதி மிகவும் அழகானவர், தைரியமானவர். அரசர் ரத்தன் சிங் இவரை மணக்க சுயம்வரத்தில் பங்கெடுத்தார். அனைவரையும் வென்ற போதிலும், பத்மாவதி தன்னை வென்றால் தான் திருமணம் என்ற நிபந்தனை விதித்தார்.
இளவரசி பத்மாவதியின் நிபந்தனை ஏற்று, அவரை வென்று திருமணம் செய்து, தனது சித்தூர் ராஜ்ஜியத்தின் ராணியாக ஆக்கிக் கொண்டார் ரத்தன் சிங். அப்போது தான் அலாவுதீன் கில்ஜி பத்மாவதியை பற்றி அறிந்து அவரை அடைய துணிந்தார். சித்தூர் நோக்கி படையும் எடுத்தார். தன்னை அடைய வரும் காமுகனின் கைகளில் சிக்குவதற்கு முன்னரே தீயில் இறங்கி தற்கொலை செய்துக் கொண்டார் ராணி பத்மாவதி.

மகாராணி காயத்திரி தேவி!

ஜெய்பூரின் மூன்றாம் மகாராணி காயத்ரி தேவி. இவரை ஜெய்பூரின் ராஜமாதா என்றே அழைக்கிறார்கள். இவர் இரண்டாம் எச்.எச். மகாராஜா சவாய் மன் சிங்கை திருமணம் செய்துக் கொண்டார். அந்த காலத்திலேயே ஆடை, அணிகலன், ஆடம்பரத்திற்கு பெயர் போனவர் மகாராணி காயத்திரி தேவி. இவரது அழகில் மயங்காதவரே இல்லை என்று கூறுகிறார்கள்.
 
பரோடாவின் சீதா தேவி

இவர் மிர்சாபுரத்தின் இளவரசி. இவரை பிரபலமாக இந்தியன் வாலிஸ் சிம்ப்சன் என அழைத்து வந்தனர். தனது பண்பால் பலரது பாராட்டுகளையும், பலருக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்தவர் என பரோடாவின் சீதா தேவியை கூறுகிறார்கள்.
 
ராணி விஜய தேவி

இந்திய வரலாற்றின் முக்கிய அரசிகளுள் ஒருவராக அறியப்படுகிறார் ராணி விஜய தேவி. இவரது அழகே இவரது அறிவு தான் என்கிறார்கள். இவர் கர்னாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கியவர். வீணை வாசிப்பதில் வல்லவர். இவர் வாழ்ந்த காலத்தில் பியானோ வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார்.
 

கபூர்தளா சீதா தேவி!

கபூர்தளா சீதா தேவி, பிரபலமாக கராமின் இளவரசியாக அறியப்படுகிறார். அந்த காலத்திலேயே ஐரோப்பிய மொழிகளை கற்று தேர்ந்திருந்தார். இந்திய அரசிகளில் மிகவும் அழகானவர் என அறியப்படுகிறார். நீளமான உடை மற்றும் கற்கள் பதித்த ஆபரணங்கள் என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். ஃபேஷன் மீது அளவுகடந்த ஈர்ப்பு கொண்டிருந்தார்.
 

மகாராணி ஜிஜாபாய்!

மகாராணி ஜிஜாபாய் ராஜமாதா ஜிஜாபாய் என்றும் அழைக்கப்பட்டவர். இவர் இராணுவ தளபதியை திருமணம் செய்துக் கொண்டார். சிவாஜியின் அம்மாவும் ஆவார். தனது கணவரின் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ஜிஜாபாய். மராத்திய சாம்ராஜ்ஜியத்தை அமைத்த சிவாஜியின் வெற்றிக்கு ஊக்கமாக இருந்தவர். தனது தாயை வணங்காமல் எந்த வேலையையும் செய்ததில்லை சிவாஜி.
 

ராணி லக்ஷ்மிபாய்!

வாரணாசியில் பிறந்த போது இவரது பெயர் மணிகர்ணிகா. இவர் ஜான்சி மகாராஜாவை திருமணம் செய்து கொண்ட பிறகு தனது பெயரை லக்ஷ்மிபாய் என மாற்றிக் கொண்டார். இவரை பிரபலமாக ஜான்சி ராணி என்றே அழைத்து வந்தனர். தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் பெயர் போனவர் ராணி லக்ஷ்மிபாய். 1857ல் நடந்த போரில் தனது வீரத்தை போரிலும் காட்டியவர் ராணி லக்ஷ்மிபாய்.
 

அக்கா தேவி!

சாளுக்கிய ராஜ்ஜியத்தின் இளவரசி. தனது திறமையால் ஆளுமை பொறுப்பில் இருந்தவர் அக்கா தேவி. இவரை ஒரு கடவுளாக இன்றளவும் வணங்கி வருகிறார்கள். பெண்ணென்றால் அழகுக்குரியவள் என்பதை தாண்டி, ஆளுமை சக்தியும் கொண்டவள் என்பதை அந்த காலத்திலேயே நிரூபணம் செய்தவர் அக்கா தேவி.
 

ருத்திரமாதேவி

வாரங்கல்ல ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில நைதவோலுவின் இளவரசனார் வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.
ருத்திரமாதேவி கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார்.

 

இராணி வேலுநாச்சியார்

இராணிவேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில்.தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண்விடுதலைப் போராட்டத்தலைவி.இவரே இந்தியாவின்முதல்பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக