Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 28 டிசம்பர், 2020

Samsung Galaxy A72 4G மற்றும் 5G மாடல்கள்: வெளியீட்டு தேதி, விலை, அம்சங்கள்!

 Best Samsung phones 2020: finding the right Galaxy for you | TechRadar

சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ72 4ஜி மற்றும் 5ஜி மாடலின் எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் இதோ...சாம்சங் கேலக்ஸி A72 4ஜி ஸ்மார்ட்போன் எதிர்பார்த்ததை விட கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, பல லீக்ஸ் தகவல்களில் சிக்கியுள்ள இந்த லேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க் தளத்தில் காணப்பட்டுள்ளது.


வெளியான கீக்பெஞ்ச் பெஞ்ச்மார்க் பட்டியலானது குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் அனைத்து முக்கிய விவரங்களையும் வெளிப்படுத்தி உள்ளது. சரி வாருங்கள் சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கலாம்? இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? போன்ற விவரங்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனில் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 4ஜி மாடல் மற்றும் 5ஜி மாடலாக அறிமுகமாகும். ஏனெனில் 4ஜி மாறுபாடானது SM-A725F என்கிற மாடல் நம்பரின் கீழும், 5G மாறுபாடானது SM-A726B என்கிற மாடல் நம்பரின் கீழும் காணப்பட்டுள்ளது.


வெளியான சமீபத்திய கீக்பெஞ்ச் பட்டியலானது, கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனின் புதிய விவரங்களை வெளிப்படுத்தியது. அதன்படி, இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 720 ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். இது 8 ஜிபி ரேம் உடன் வர வேண்டும். 8 ஜிபி ரேம் வேரியண்ட் உடன் மற்ற ஸ்டோரேஜ் வகைகளும் வெளியாகலாம்.



வரவிருக்கும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அளவிலான பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவை பேக் செய்யலாம். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறலாம். ஆனால் என்னென்ன சென்சார்கள் என்பதில் தெளிவில்லை. மென்பொருள் துறையை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ72 4ஜி மாடல் கூகுளின் சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (அவுட் ஆப் பாக்ஸ்) கொண்டு இயங்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை:

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி மாடல்களின் விலை சார்ந்த விவரங்களும் லீக் ஆகியுள்ளன. வதந்திகளின் படி, 5ஜி மாடலானது ரூ.49,999 - ரூ.53,999 க்குள் எங்காவது ஒரு விலை புள்ளியில் நிற்கலாம். மறுகையில் உள்ள 4 ஜி வேரியண்ட் ஆனது ரூ.40,499 - ரூ.44,999 வரை செல்லலாம். இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் வயலட் உள்ளிட்ட நான்கு வண்ண விருப்பங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அறிமுகமாகும்?

சாம்சங் கேலக்ஸி ஏ72 மாடல்கள், அதாவது 4 ஜி மற்றும் 5 ஜி வேரியண்ட்கள், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக