சனி, 23 மே, 2020

12-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

 புதன் சமநிலை கிரகம். இந்த கிரகம் ஒருவரை நல்ல வழியிலும் செலுத்தும், தீய வழியிலும் கொண்டு செல்லும். மனிதனின் எல்லா வகையான போதை பழக்கங்களுக்கும் வலிமை இல்லாத புதனே காரணம்.

வித்யாகாரகன், மாதுலகாரகன் என்று சொல்லப்படும் புதன் கிரகம் அளப்பரிய ஆற்றல்களை கொண்டுள்ளது. சர்வம் புதன் மயம் என்று ஒரே வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிடலாம்.


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது புதன் பலத்துடன், அம்சத்துடன், அருளுடன் பிறப்பது அரிது. அந்தளவிற்கு புதனின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

லக்னத்திற்கு 12-ம் இடத்தில் புதன் நின்றால் அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள்.

12ல் புதன் இருந்தால் என்ன பலன்?

👉 சோம்பல் குணம் கொண்டவர்கள்.

👉 அனுபவ ஞானம் உடையவர்கள்.

👉 தயாள குணம் கொண்டவர்கள்.

👉 மற்றவர்களின் ஆதரவுகள் குறைவுபடும்.

👉 தூக்கத்தில் அலாதி விருப்பம் கொண்டவர்கள்.

👉 பெண்களின் மூலம் விரயம் ஏற்படும்.

👉 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

👉 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 சுயநலம் கொண்டவர்கள்.

👉 துப்பறியும் திறன் உடையவர்கள்.

👉 மத்தியமான கல்வியை கொண்டவர்கள்.

👉 பேச்சுவன்மையால் காரியத்தை சாதிக்கக்கூடியவர்கள்.

👉 எதிர்ப்புகள் அதிகம் கொண்டவர்கள்.

👉 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாறக்கூடியவர்கள்.

👉 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்