தொழிலாளர் சம்பள பிரச்சனையின் காரணமாகச் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கர்நாடகாவின் கோலார் மாநிலத்தில் இருக்கும் விஸ்தரான் ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை அடித்து, உடைத்துக் கடுமையாகச் சேதப்படுத்தினர்.
இந்நிலையில் விஸ்தரான் ஸ்மார்ட்போன் தொழிற்சாலை அடுத்த 20 நாளில் உற்பத்தி பணிகளைத் துவங்க முழுமையாகத் தயாராகும் எனக் கர்நாடக மாநிலத்தின் தொழிலாளர் அமைச்சர் சிவராம் ஹெப்பர் தெரிவித்துள்ளார்.
விஸ்திரான் தொழிற்சாலை
டிசம்பர் 12ஆம் தேதி கோலார் மாநிலத்தின் நார்சபுரா பகுதியில் இருக்கும் தைவான் நாட்டின் விஸ்திரான் தொழிற்சாலையில், சம்பளம் மற்றும் ஓவர்டைம் ஊதியம் முறையாகவும், குறித்த நாளில் செலுத்தாத காரணத்திற்காக 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.
ஊழியர்கள் போராட்டம்
இதற்கிடையில் ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத காரணத்தால் ஊழியர்கள் தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலை சொத்துக்களை அடித்து உடைத்தனர். இதனால் இந்தியாவில் புதிதாக வர்த்தகத்தைத் துவங்கிய விஸ்திரான் தொழிற்சாலைக்கு அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டது.
நஷ்ட அளவீடு
விஸ்தரான் ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை முதலில் ஊழியர்களின் தாக்குதல் மூலம் 437.7 கோடி ரூபாய் அளவிலான பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்த நிலையில், தனது கணக்கீட்டில் பின்வாங்கிப் பாதிப்பின் அளவு 50 கோடி ரூபாய் மட்டுமே என அறிவித்தது.
தொழிலாளர் அமைச்சர்
இன்நிலையில் கர்நாடக மாநில தொழிலாளர் அமைச்சர் சிவராம் ஹெப்பர், தான் விஸ்திரான் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேசியதாகவும், அடுத்த 20 நாட்களுக்குள் மொத்த பாதிப்புகளையும் சரி செய்து முழுமையாக இயங்க துவங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தைவான் பங்குச்சந்தை
மேலும் தைவான் பங்குச்சந்தையில் விஸ்திரான் நிறுவனம், இந்திய தொழிற்சாலையில் தொழிலாளர்களின் தாக்குதலால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை. இதனால் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் எவ்விதமான பதிப்பும் இல்லை என அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக