Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 நவம்பர், 2017

கொல்கத்தா வாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம், தமிழ்நாட்டிற்கு எப்போது.?



ஏர்செல் நிறுவனம் இன்று கொல்கத்தா வட்டத்தில் அதன் சமீபத்திய திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த புதிய ஏர்செல் திட்டங்களானது, புதிய பயனர்களுக்கு, ஏற்கனவே இருக்கும் பயணர்களுக்கு என தனித்தனியே தொகுக்கப்பட்டுள்ளது. உடன் கொல்கத்தா தான் ஏர்செல் நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த மதிப்பீட்டிலான திட்டங்களை தொடர்ந்து வழங்கவும் ஏர்செல் உறுதியளித்துள்ளது.

 
மூன்று திட்டங்களுமே காம்போ திட்டங்களாகும்.!
புதிதாக தொகுக்கப்பட்டுள்ள திட்டங்களை பொறுத்தவரை, ஏர்செல் நெட்வர்க் உடன் சேர விரும்பும் புதிய சந்தாதாரர்களுக்கு மூன்று புதிய திட்டங்கள் உள்ளன. எப்ஆர்சி 93, எப்ஆர்சி 175 மற்றும் எப்ஆர்சி 349 என்று தொகுக்கபட்டுள்ள மூன்று திட்டங்களுமே காம்போ திட்டங்களாகும், குரல் மற்றும் தரவு நன்மைகளை வழங்கும்.
 
மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!
எப்ஆர்சி 93 திட்டமானது ரூ.70/- மதிப்பிலான பேச்சு நேரம், உள்ளூர் மற்றும் எல்.டி.டி அழைப்புகளை 20 பைசா / நிமிடம், 250எம்பி அளவிலான தரவு மற்றும் 50 உள்ளூர் மற்றும் எல்டிடி எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

 
நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா.!
பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் எப்ஆர்சி 175 திட்டமானது, அனைத்து நெட்வர்க் உடனான வரம்பற்ற மொபைல் அழைப்புகள் (உள்ளூர் + எஸ்டிடி), நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 3ஜி அல்லது 2ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
 
செல்லுபடியாகும் காலம் 84 நாட்களுக்கு நீளும்.!
இந்த எப்ஆர்சி 175 திட்டமானது மொத்தம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். எப்ஆர்சி 349 திட்டத்தை பொறுத்தமட்டில் எப்ஆர்சி 175 திட்டம் வழங்கும் அதே நன்மைகள் கொடுக்கிறது, ஆனால் அதன் செல்லுபடியாகும் காலம் 84 நாட்களுக்கு நீளும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரூ.94/- திட்டம்.!
தொடர்ந்து, கொல்கத்தா வட்டத்தில் இருக்கும் ஏர்செல் சந்தாதாரர்களுக்கான புதிய மூன்று திட்டங்களை பொறுத்தமட்டில், ரூ.94, ரூ.143 திட்டம் மற்றும் ரூ.348/- திட்டங்கள் அறிமுகமாகியுள்ளன. ரூ.94/- திட்டத்தை பற்றி பேசுகையில், இது அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி மொபைல் அழைப்புகளை 20 பைசா / நிமிடம் மற்றும் 1400 உள்ளூர் + தேசிய எஸ்எம்எஸ்களை, மொத்தம் 365 நாட்கள் செல்லுபடி காலத்தில் வழங்கும்.
 
ரூ.143/- திட்டம்.!
ரூ.143/- திட்டத்தை பொறுத்தமட்டில், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், 2ஜிபி அளவிலான 3ஜி/2ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை பெறலாம். இந்த திட்டம் ரீசார்ஜ் செய்த தேதி முதல் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
 
ரூ.348/- மிகவும் சிறப்பானதொரு திட்டம்.!
கடைசி மற்றும் மூன்றாவது திட்டமானது தான் இருப்பதிலேயே மிகவும் சிறப்பானதொரு திட்டமாக திகழ்கிறது. ரூ.348/- திட்டமானது வரம்பற்ற உள்ளூர் + எஸ்.டி.டி. அழைப்புகள், ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 3ஜி / 2ஜி தரவுகளை மொத்தம் 84 நாட்களுக்கு வழங்குகிறது. துரதிருஷ்டவசமாக, இந்த திட்டத்தின் கீழ் குரல் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு வெறும் 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1200 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கிறது.
 
மற்ற வட்டாரங்களில் எப்போது.?
இந்த புதிய திட்டங்களை மற்ற வட்டாரங்களில் எப்போது தொடங்கும் என்பது சார்ந்த வார்த்தைகளை ஏர்செல் நிறுவனம் பகிர்ந்துகொள்ளவில்லை. ஏர்செல் நிறுவனத்தின் வயர்லெஸ் பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரம் மற்றும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் வட்டத்தின் கீழ் உள்ள பிரதான மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்றாகும். ஆகையால், இதேபோன்ற தொகுக்கப்பட்ட திட்டங்களை விரைவில் தமிழ்நாட்டிலும் எதிர்பார்க்கலாம்.
 
தமிழ்நாட்டில் கிடைக்கும் ரூ.499/- திட்டம்.!
சமீபத்தில், ஏர்செல் நிறுவனம் தமிழ்நாட்டில் இதே போன்ற திட்டங்களை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. ரூ.499/- என்ற விலைக்கு அறிமுகமான அந்த திட்டம், ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவு, மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக