Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜனவரி, 2018

நடந்தது இதுதான், ஆனால் ஏன் நடந்தது என்பது எப்போதுமே புதிர்தான்..!?

நாம் வாழும் இந்த உலகம் வெறும் அழகானவைகளாலும், அதிசயங்களாலும் மட்டுமே சூழ்ந்திருக்கவில்லை, வெளிப்படாத பல விசித்திரங்களாலும், மர்மங்களாலும் சூழ்ந்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தவர் என்றால் இந்த தொகுப்பு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்.


பெரும்பான்மையான உலக சமாச்சாரங்களை கண்டுபிடித்து விட்டதாக நாம் நினைக்கும் அதேசமயம், சில விடயங்களின் அடிப்படையை கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்பதும் நிதர்சனம் தான். அப்படியாக, நடந்தது இதுதான் ஆனால் அது ஏன் நடந்தது..? எப்படி நடந்தது..? - என்பதை பற்றியெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாத அறிவியல்-தொழில்நுட்ப புதிர்களை பற்றிய தொகுப்பு தான் இது.



  • #1

    #1

    புதிர் #01

    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இந்த பெண்மணியின் உடலை சுற்றி இருந்த மர்மமான திரவம் என்ன என்பது பற்றி இன்றுவரைக்கும் விஞ்ஞான உலகத்தினால் கண்டுப்பிடிக்க இயலவில்லை.




  • #2

    #2

    சிறப்பு :

    இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் நன்கு பராமரிக்கப்பட்ட உடல்களிலேயே இதுதான் மிகவும் சிறப்பான ஒன்று என்றும் நம்பப்படுகிறது.




  • #3

    #3

    புதிர் #02

    தண்டர்க்ளவுட்ஸ் (thunderclouds) இடியும் மின்னலும் உண்டாக்கும் மேகத்தின் அர்த்தம் என்ன என்பது இன்றுவரை விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கவே முடியவில்லை.




  • #4

    #4

    செப்டம்பர் முதல் மார்ச் :

    உடன் தண்டர்க்ளவுட்கள் ஏன் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலாக ஒவ்வொரு மதியமும் வானில் கூடுகிறது என்பதும் புதிர்தான்..!




  • #5

    #5

    புதிர் #03

    சிலி நகரத்தில் கைவிடப்பட்ட ஒரு பகுதியில் இருந்து ஒரு 6 - 8 அங்குல நீளம் எலும்புக்கூடு எதனுடையடு என்பது யாவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.




  • #6

    #6

    தீர்வு :

    கடினமான பற்கள், வீங்கிய தலைப்பகுதி, தோல் என காட்சியளிக்கும் இது வேற்றுகிரக வாசிகளை நினைவூட்டினாலும், பின்பு இது மனித இனம் தான் என்று கண்டறியப்பட்ட பின்பு கிளம்பிய பீதிகளுகும் கேள்விகளுக்கும் அளவே இல்லை, தீர்வும் இல்லை.




  • #7

    #7

    புதிர் #04

    கடந்த எழுபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 90 வெவ்வேறு வர்த்தக விமானங்கள் காணாமல் போயிருக்கின்றன..!




  • #8

    #8

    புதிர் #05

    1973 ஆம் ஆண்டு, இரண்டு நபர்கள், நண்டு போன்றகைகள் கொண்ட வேற்றுகிரக பிராணிகள் மூலம் கடத்தப்பட்டோம் என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.




  • #9

    #9

    சோதனை :

    சார்லஸ் ஹிக்ஸன் மற்றும் கால்வின் பார்க்கர் ஆகிய இருவரும் மீன் பிடிக்க சென்றபோது கடத்தப் பட்டதாக கூறினர், அதில் சார்லஸ் ஹிக்ஸன் பொய் கண்டறியும் சோதனையில் வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




  • #10

    #10

    புதிர் #06

    1876-ஆம் ஆண்டு, அது மர்மமான முறையில் பாத் நாட்டில் உள்ள ரான்கினின் உள்ளூரான கென்டக்கியில் மிகவும் மர்மமான இறைச்சி மழை பெய்தது.




  • #11

    #11

    புதிர் #07

    பிளாக் நைட் செயற்கைக்கோளின் (The Black Knight Satellite) தோற்றம் மற்றும் நோக்கம் இன்று வரையிலாக ஒரு புதிர் தான்.




  • #12

    #12

    உருவாக்கம் :

    மனிதனால் உருவாக்கம் பெற்ற எந்த ஒரு செயற்கை கோளும் விண்வெளிக்குள் செலுத்தப் படாத காலகட்டத்தில் இருந்தே பிளாக் நைட் செயற்கைக்கோள் விண்வெளியில் காணப்பட்டுக் கொண்டிருகிறது.




  • #13

    #13

    புதிர் #08

    கோகோ எனும் மனித குரங்கிற்கு இயற்கையாகவே சைகை மொழி தெரியும் மற்றும் சைகையில் பதிலும் அளிக்கும்.




  • #14

    #14

    நடனமாட வைக்கும்

    1518-ல், ஒரு நடனமாட வைக்கும் பிளேக் நோய் ஆஸ்திரியாவில் உண்டானது..!




  • #15

    #15

    புதிர் #10

    மூளையில் காயம் பட்டு மீண்டு எழும் போது இந்த மனிதர் கலை இசை திறன்களை (Acquired Musical Savant Syndrome) கொண்ட மனநிலையோடு இருந்தார்.




  • #16

    #16

    புதிர் #11

    வோய்னிச் கையெழுத்துப்படிவம் என்ற 240 பக்க புத்தகம் ஒன்று உள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அந்த புத்தகத்தின் உள்ள மொழி என்ன என்பது இன்றுவரையிலாக கண்டுபிடிக்கப்படவில்லை.




  • #17

    #17

    புதிர் #12

    டராப் - உலகின் அரிதான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும். 1968-ல் சிகாகோ நகரில் ஒரு செங்கல் சுவர் பின்னால் கிடைக்கப் பெற்ற இது இன்றுவரை இயங்குகிறது.




  • #18

    #18

    புதிர் #13

    உலகின் மிகப்பெரிய வைரஸ் ஆன பண்டோரா ஆஸ்திரேலியாவிற்க்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது , இதனுள் சுமார் 93 % அடையாளம் தெரியாத மரபியல்கள் உள்ளனவாம்.




  • #19

    புதிர் #14

    மினசோட்டாவில் உள்ள டெவில்ஸ் கெட்டில் என்பது அங்கு வழியும் ஆற்றில் பாதியை விழுங்கும் ஒரு மாபெரும் துளை ஆகும். ஆனால் அது எங்கு சென்று முடிகிறது என்பது யாருக்குமே தெரியாது.




  • #20

    #20

    புதிர் #15

    கனடாவின் ஓக் தீவில் உள்ள ஒரு தரைப் பகுதியில் உள்ள ஒரு மாபெரும் துளையானது முடிவே இல்லாதது என்றும், அது ஒரு கொள்ளையர்களின் பொக்கிஷ வீடு என்றும் கூறப்படுகிறது.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக