Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 நவம்பர், 2020

தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றுவான்... அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

--------------------------------------------------------

அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?

புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!

அரசன் : 😳😳

--------------------------------------------------------

கோபு : டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதியிலேயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.

பாபு : அப்புறம்?

கோபு : அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப்புள்ளி வெச்சிட்டேன்.

பாபு : 😛😛

--------------------------------------------------------

தொண்டர் : தலைவா! உங்க பேரில் விசாரணைக்கு கமிஷன் வெச்சிருக்காங்க.

தலைவர் : 'கமிஷனா"... வெரி குட்! எவ்வளவு கிடைக்கும்?...

தொண்டர் : 😖😖

--------------------------------------------------------

சின்ன சின்ன டிப்ஸ்...!!!

--------------------------------------------------------

🐜 எலுமிச்சை வாடை எறும்புக்கு பிடிக்காது. எனவே தரையை சுத்தம் செய்யும்போது, தண்ணீரில் சிறிது எலுமிச்சைச்சாறு ஊற்றி கலந்து, சுத்தம் செய்யலாம்.

🐜 துளசியின் வாடைக்கும் எறும்புகள் வராது. வீட்டில் துளசிச்செடி இருந்தால், அதில் இரண்டு இலைகளை பிய்த்து, கையில் வைத்து கசக்கி, அதை அப்படியே எறும்பு வரும் இடத்தில் போடவும்.

--------------------------------------------------------

குறளும், பொருளும்...!!

--------------------------------------------------------

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

பொருள் :

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவு உயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

--------------------------------------------------------

விடுகதைகள்...!!

--------------------------------------------------------

1. உருளும் வீட்டைச் சுற்றிக் கருப்பு வேலி. அது என்ன?

2. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான்... மற்றவன் நடப்பான். அது என்ன?

3. தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றும், ஆனால் சிறகில்லை. அது என்ன?

4. ஆயிரம் பேருக்கு ஓர் இடைக்கச்சை. அது என்ன?

விடைகள் :

1. கண், இமை👀

2. கடிகார முட்கள்🕑

3. தபால் தலை🗾

4. துடைப்பம்.🌿

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக