Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 26 பிப்ரவரி, 2018

வங்கி கடனுக்கு இனி லோ லோன்னு அலைய வேண்டாம்...


வங்கிக்கடன் வாங்குவதற்கு இனிமேல் எந்த விதமான உத்திரவாதமும் இல்லாமல், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் விவரங்களின் அடிப்படையிலேயே மிக எளிமையாக விரைவாக கடன் வாங்க முடியும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவர் நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார்.
சிறுவர்த்தகம் நடத்தும் தனி நபர்களும், சிறியது முதல் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களும் அவசரத் தேவைக்கும் வியாபர அபிவிருத்திக்கும் தேவைப்படும் பணத்தை திரட்ட அவர்கள் பெரிதும் நம்பியிருப்பது, வங்கிகளைத்தான்.
வங்கிகளில்தான் கடன்களுக்கான வட்டி விகிதமானது ஒரளவு நியாமான அளவில் உள்ளது. இதன் காரணமாகவே அனைவரும் கடன் வாங்குவதற்கு வங்கிகளை நாடுகின்றனர்.
கடனுக்கு உத்தரவாதம்

கடனுக்கு உத்தரவாதம்

வங்கிகளில் கடன் வாங்குவதற்கு, கடன் கேட்கும் நபர்களிடம் உத்திரவாதமாக சொத்துப் பத்திரங்களையோ, வருமான வரித் தாக்கல் செய்த விபரங்களையோ தாக்கல் செய்வது அவசியமாகும். அது மட்டுமில்லாமல் தங்கள் உறவினர் ஒருவரையும் நண்பர் ஒருவரையும், இதில் கோர்த்து விடவேண்டியது இருக்கும். அப்படி இல்லை என்றால் கடன் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகிவிடும். அப்படி இல்லை என்றால் கடன் வாங்குவதற்கு தனியார் நிதி நிறுவனங்களைத்தான் நாடவேண்டியது இருக்கும்.
ஜிஎஸ்டி கணக்கு

ஜிஎஸ்டி கணக்கு

ஜிஎஸ்டி வரி முறையில் வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் வர்த்தக விபரங்களை தாக்கல் செய்துவருவதால், வர்த்தகர்களின் அனைத்து வணிக விபரங்களும் ஜிஎஸ்டி இணையதளத்தில் அடங்கிவிடும். வர்த்தகர்கள் தாக்கல் செய்துள்ள கொள்முதல், விற்பனை மற்றும் நிகர லாபம் போன்றவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி இணையதளமே ஜிஎஸ்டி கணக்கை தயாரித்து விடும்.
சிரமம் வேண்டாம்

சிரமம் வேண்டாம்

வங்கிகளும் ஜிஎஸ்டி இணையதளத்தில் வர்த்தகர்களின் கணக்கை ஆராய்ந்து அதன் அடிப்படையில் கடன் வழங்குவது பற்றி முடிவெடுக்கம். இனிமேல், வங்கிகளில் கடன் வாங்குவதற்கு இந்த மாதிரியான சிரமங்களை நாம் சந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது.
ஆவணங்கள் தாக்கல்

ஆவணங்கள் தாக்கல்

இது பற்றி விளக்கமளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்சாரா தலைவர் நந்தன் நிலகேனி, தற்போது ஜிஎஸ்டி இணையதளத்தில் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் கொள்முதல் முதல் விற்பனை வரை அனைத்து நடவடிக்கைகளும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுவிடுவதால், அவர்கள் சமர்ப்பித்த விபரங்களின் அடிப்படையில், அவர்களைப் பற்றிய முழு விபரங்களும் ஜிஎஸ்டி இணையதளத்தில் தெரிந்துவிடும் என்றார்.
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்

வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் வசதிக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி வரி தொடர்பான கொள்முதல் மற்றும் விற்பனை, நிகர வரி செலுத்துவதற்கான மிகவும் எளிமையான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யும் முறையானது தயார் செய்யப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த கணக்கு தாக்கல் செய்யும் முறையை அனைத்து வர்த்தக நிறுவனங்களும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.
வியாபார வளர்ச்சிக்கு கடன்

வியாபார வளர்ச்சிக்கு கடன்

ஜிஎஸ்டி இணையதளத்தில் உள்ள விபரங்களை அலசி ஆராய்ந்து ஜிஎஸ்டி இணையதளமே வர்த்தக நிறுவனங்களின் கணக்கை தயாரித்து அளித்துவிடும். வர்த்தக நிறுவனங்கள் தனியாக எந்த ஒரு விபரத்தையும் சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் இருக்காது. போலியாக எந்த ஒரு தகவலையும் சமர்ப்பிக்கவும் முடியாது.
இதன்மூலம் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மிகக் குறுகிய வர்த்தக நிறுவனங்களும், பெட்டிக் கடை நடத்துபவர்களும் தங்களின் வியாபர வளர்ச்சிக்காக வங்கிகளிடம்இருந்து எளிதாக கடன் பெறமுடியும்.
ஜிஎஸ்டி இணையத்தில் கணக்கு

ஜிஎஸ்டி இணையத்தில் கணக்கு

இந்த நடைமுறையானது தனிநபர்களுக்கும் நுகர்வோருக்கும் பொருந்தக்கூடியதாகும். தனிநபர்களும் நுகர்வோரும் தாங்கல் தாக்கல் செய்துள்ள ஜிஎஸ்டி தொடர்பான ஆவணங்களின் படி அவர்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் எந்த விதமான பிணை ஆவணங்கள் இன்றி கடன் வழங்க முடியும். சொத்து சம்பந்தமான எந்தவிதமான ஆவணங்களும் தேவையில்லை. ஜிஎஸ்டி இணையதளத்தில் தாக்கல் செய்துள்ள விபரங்களின் அடிப்படையிலேயே கடன் வழங்க முடியும்.
இணைய தள பயன்பாட்டாளர்கள்

இணைய தள பயன்பாட்டாளர்கள்

இந்தியாவில் மொத்தம் 120 கோடி மொபைல் போன்களும், 119 கோடி ஆதார் அட்டைகளும், 582 மில்லியன் வங்கிக் கணக்குகளும், 462 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களும் உள்ளனர். 375 மில்லியன் மக்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு இலக்கை அடைய 18 ஆண்டுகள் ஆனது. ஆனால் யு.பி.ஐ. இந்த நிலையை அடைய 18 மாதங்கள் மட்டுமே ஆனது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை

டிஜிட்டல் பண பரிவர்த்தனை

வரும் டிசம்பர் மாதத்துக்குள் யுபிஐ 100 கோடி பரிவர்த்தனைகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இனிவரும் நாட்களில் ரொக்கப் பணப் பரிவர்த்தனை இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனையே இருக்கும் என்றும் நந்தன் நிலகேனி கூறியுள்ளார்.
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக