Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 22 பிப்ரவரி, 2018

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான கேள்விகளின் தொகுப்பு படிங்க வெற்றி பெறுங்க

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிக்கும் விருப்பம் கொண்டவர்கள் அனைவருக்கும் படிக்க வேண்டிய உத்வேகம் இருக்கும் ஆனால் படிக்கும் பொழுது தேவையற்ற கவன சிதறல்கள் வரும், அதனை போக்க வேண்டும்.

எந்தளவிற்கு நீங்கள் உங்கள் படிக்க வேண்டிய முடிவில் தீவிரமாக இருக்கின்றீர்களோ அந்தளவிற்கு வரும் இடையூறுகளை களைத்தெரிய வேண்டும். உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு என்னென்ன வெல்லாம் காரணமோ அதை கண்டறியுங்கள் அதனை சரி செய்யுங்கள். அதுவே உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க செய்யும்.

1. சேது பாரதத்திட்டத்தினை பாரத பிரதமர் என்று தொடங்கினார்?

1. சேது பாரதத்திட்டத்தினை பாரத பிரதமர் என்று தொடங்கினார்?

1 2016, மார்ச் 4
2 2014 ஏப்ரல் 3
3 2017 ஜூன் 5
விடை: 1 2016, மார்ச் 4
விளக்கம் 
: 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் இரயில்வே கேட்டுகளற்ற நெடுஞ்சாலைகளாக மாற்றும் இலக்கு நோக்கி செயபட்டு சாலை போக்கு வரத்த்து அமைச்சகம் மேம்ப்பாடு குறித்து உறுவாக்கிய திட்டம் ஆகும்.

2. மக்மோகன் எல்லை கோடு எந்த இரு நாடுகளுக்கிடையே வகுப்பட்ட கோடுகள் ?

1 இந்தியா- சீனா எல்லை கோடு
2 இந்தியா- பாகிஸ்தான்
3 இந்தியா- ஆப்கான்
விடை: 1 இந்தியா- சீனா எல்லை கோடு 
விளக்கம் 
: இந்தியா சீனா இடையே எல்லையாக இமயமலைகள் இருக்கின்றன. இவ்விரு நாடுகளுக்கிடையே மக்மோகன் எல்லை கோடுகள் மூலம் பிரிக்கப்படுகின்றது. இந்த கோடுகள் இமயமலை வழியாகச் செல்கின்றன.

3 தார் எனப்படுவது யாது?

1. இந்திய நீர்நிலைகள்
2.  இந்தியாவின் பாலைவனம்
3. இந்திய மலைபகுதிகள்
விடை: 2 இந்தியாவின் பாலைவனம் 
விளக்கம் 
: இந்தியாவின் பெரிய பாலைவனமாக தார் பாலைவனம் விளங்குகின்றது. தார் பாலைவனம் இந்தியாவின் மேற்கு ராஜஸ்தான் முதல் பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாநிலங்களில் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள இப்பாலைவனம் சோலிஸ்தான் என்று அழைக்கப்படுகின்றது.

4. அபிநவ பாரதம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1 1907
2 1917
3 1920
விடை: 1.1907 விளக்கம் : அபிநவ பாரதம் என்று தொடங்கப்பட்டது 1907 இல் சாவார்க்கர் சகோதரர்கள் இதனை துவங்கினார்கள். வினாயக் தாமோதரர் சாவார்கர் எழுதிய புத்தகம் இந்தியா பர்ஸ்ட் வார் ஆப் இண்டிபெண்டன்ஸ்

4. சட்டமறுப்பு இயக்கத்தையொட்டி நடைபெற்ற போராட்டம் எது?

1 ஒத்துழையாலை இயக்கம்
2 கிலாபத் இயக்கம்
3 தண்டி யாத்திரை
விடை: தண்டி யாத்திரை
விளக்கம் : சபர்மதி ஆசிரம் முதல் தண்டி வரை 241 மைல்கள் 24 நாட்கள் தொடர்ந்து காந்தி நடந்து சென்றார். நாடெங்கிலும் தண்டியாத்திரைக்கு பெரும் ஆதரவு பெருகியது சுதந்திர வேட்க்கை

5. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்

1 அரவிந்த் கோஷ்
2 லாலா லஜபதிராய்
3 மதன்மோகன் மாளவியா
விடை: 2 லாலா லஜபதிராய் 
விளக்கம் 
: லாலா லஜபதிராய் சைமன் கமிஷன் போராட்டத்தின் போது காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் இந்திய மக்களின் காவலன் என அழைக்கப்பட்டார்.

6. காந்தியின் முதல் போராட்டம் எது?

1 சம்பரான் போராட்டம்
2 கேதா போராட்டம்
3 அகமதாபாத் மில் போராட்டம்
விடை: 1 சம்பரான் போராட்டம்
விளக்கம் 
: காந்தியின் முதல் போராட்டம் 1917 இல் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற சம்பரான் போராட்டம் , காந்தியுடன் துணை நின்றவர்கள் டாக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் கிருபாளனி

7. இந்துமதம் இல்லை என்றால் இந்தியா இருக்காது என்று கூரியவர்?

1 திலகர்
2 அன்னிபெசண்ட்
3 தயானந்த சரஸ்வதி
விடை: 2 அன்னிபெசண்ட் 
விளக்கம் 
: இந்து மதம் இல்லை என்றால் இந்தியா இருக்காது என்ற கூரியவர் அன்னிபெசண்ட் காமன் வீல் என்ற பத்திரிக்கையை துவக்கினார். இந்து மதம் இருக்காது இவர் அய்ரிஷ் நாட்டை சேர்ந்தவர்.

8. வுட்ஸ் குழு என்றால் என்ன?

1 கல்விதுறைக்காக ஏற்படுத்தப்படட் குழு
2 கவுன்சில் கட்டம் குழு
3 சட்ட கமிசன் குழு
விடை: 1 கல்விதுறைக்காக ஏற்படுத்தப்படட் குழு 
விளக்கம் :
வுட்ஸ் குழு டல்ஹௌசி காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்டது. இந்திய மேற்கத்திய கல்வி துறையின் மாக்னா கார்டா எனப்பட்டது. இது இந்தியாவின் அறிவு சாசன் என அழைக்கப்படுகின்றது.

9. குடவோலை முறை என்றால் என்ன?

1 சோழர்களின் கூட்டமைப்பு ஆகும்.
2 சோழர்களின் ஆட்சி
3 அடிமை முறை
விடை: 1 சோழர்களின் கூட்டமைப்பு ஆகும். 
விளக்கம் 
: சோழர்களின் ஓட்டமைப்பு முறை சிறந்த கிராம கூட்டமைப்பு ஆகும், குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவர் முதலாம் பராந்தக சோழன் ஆவர்

10 . முதலில் சமண மதத்தையும் பின் சைவ மதத்தையும் பின்ப்பற்றியவர் யார்?

1 மகேந்திர வர்மன்
2 ராஜ சிம்மன்
3 அப்ராஜிதவர்மன்
விடை: 1 மகேந்திர வர்மன் 
விளக்கம் 
: பல்லவர் காலத்தில் முதலில் சமண மதத்தையும் பின் சைவ மதத்தையும் பின்ப்பற்றியவர் மகேந்திர வர்மன் ஆவார் . அப்பர் என்பவரால் இவர் சைவ மதத்திற்கு மாற்றப்பட்டவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக