Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 மே, 2019

முதலுதவியின் நோக்கங்கள்

முதலுதவியின் நோக்கங்கள் க்கான பட முடிவு



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்





முதலுதவியின் முக்கிய நோக்கங்களை மூன்று புள்ளிகளில் சுருக்கிவிடலாம். அவை பின்வருமாறு:-

1. உயிர் பாதுகாத்தல் : முதல் உதவி உட்பட அனைத்து மருத்துவ கவனிப்புகளின் சாராம்சம் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே.

2. இன்னும் கூடுதலான ஆபத்து நேர்வதை தவிர்த்தல் : நிலைமை மோசமடைவதை தவிர்த்தல் அல்லது இன்னும் கூடுதலான காயம் ஏற்படுவதை தவிர்த்தல் என்றும் இதற்கு தலைப்பிடலாம். இது சம்பந்தப்பட்ட நபரை நிலைமையின் காரணியிடமிருந்து நகர்த்துதல் போன்ற வெளி காரணங்களையும், அழுத்தம் கொடுத்து உதிரப்போக்கு தீவிரமடைவதை தவிர்த்தல் போன்ற முதலுதவி அளிக்கும் நுட்பங்களையும் உள்ளடக்கயுள்ளது.

3. குணமாவுதலை ஊக்குவித்தல் : முதல் உதவி என்பது குணமாவதை ஊக்குவிக்கும் விதத்தில் அமைய வேண்டும். இதன்படி, சிறு காயத்திற்கு பிளாஸ்திரி போடுவது போன்ற சில சந்தர்ப்பங்களில் இது முழு சிகிச்சையையும் அளிக்குமாறு அமைந்துவிடும். (அதாவது முதல் உதவியிலேயே பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விடும்).

முதலுதவிக்குத் தேவையான முக்கியத் திறன்கள் : முதலுதவி என்பது எல்லோராலும் செய்யக் கூடிய எளிதான காரியம் இல்லை. அனுபவம் இல்லாமல் பெரிய பிரச்சனைகளுக்கு செய்யும் முதல் உதவி மோசமான விளைவுகளை தந்துவிடும். இதன் அடிப்படையில் சில திறன்கள் முதலுதவி வழங்குதலுக்கு அத்தியாவசியமாக கருதப்படுகின்றன. ஆதலால் இவை உலகெங்கும் கற்பிக்கப்படுகின்றன. 

குறிப்பாக மற்ற சிறு காயங்களை கவனிக்கும் முன் முதலுதவியின் ‘ஏபிசி’ கள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இவை மிகவும் தேவையான உயிர்க்காப்பாற்றல் முயற்சிகளை உள்ளடக்கியுள்ளன. ஏபிசி என்றால் Airway, Breathing, and Circulation என்பதன் சுருக்கமாகும். அதாவது காற்றுக்குழாய், சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் என்று இவை வர்ணிக்கப்படுகின்றன அல்லது சொல்லப்படுகின்றன. முதலில் சுவாச வழி தெளிவாக உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். 

மூச்சுக்குழலில் அடைப்பு இருப்பது உயிர் அச்சுறுத்தும் அவசர நிலையாகும். இதன் பிறகு மூச்சு விடுவது ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து தேவையானால் செயற்கையாக பாதிக்கப்பட்டவரை மூச்சு விட வைக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் இரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்று சரி பார்ப்பது இல்லை. அதற்கு பதிலாக செயற்கை இரத்த அழுத்தம் எனப்படும் மார்பு அழுத்தம் (chest compressions) தரப்படும். அதுவே, நாடி சரிபார்த்தல் தீவிர நிலையில் இல்லாத ஆட்களிடம் நடத்தப்படலாம். இதனைக் கொண்டு இருதயத்தின் செயல்பாட்டை கணக்கிடலாம்.

சிலர் abc யுடன் ஒரு d யையும் (deadly bleeding or defibrillation ) சேர்த்துக்கொள்வர். இந்த ABC களை முறையாக சரிபார்த்த பின்னர், முதலுதவி அளிப்பவர் கூடுதல் சிகிச்சையை தொடங்கலாம். சில நிறுவனங்கள் abc க்கு பதிலாக மூன்று b க்களை பயிர்ச்சிவிக்கின்றன. அதாவது, இதன் பொருள் breathing, bleeding and bones என்பனவாகும். ABC களையும் 3B க்களையும் பொதுவாக தொடர்நிலையாக செய்ய வேண்டும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட படி நிலைகளை ஒரே நேரத்தில் அளிக்க வேண்டி வரும். உதாரணத்திற்கு மூச்சு மற்றும் நாடி இரண்டும் இல்லாதவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் மார்பழுத்தம் இரண்டையுமே ஒன்றாக தர வேண்டும் (ஆனால் இதற்குப் போதிய பயிற்சி அவசியம்).

முதலுதவி பயிற்சி : 
பேன்டேஜ் ஒட்டுவது, இரத்தப்போக்கு உள்ள இடத்தில் நேரடி அழுத்தம் கொடுப்பது போன்ற அடிப்படை பயிற்சிகள் பெரிதாக அன்றாட அனுபவங்கள் மூலமே கிடைக்கின்றன. எனினும், திறமையான, உயிரை காப்பாற்றும் முதலுதவிக்கு ஒழுங்கான பயிற்சி தேவை. 

உதாரணத்திற்கு இதய இயக்க மீட்பு (CPR-cardipulmonary resuscitation) போன்ற உயிர் அச்சுறுத்துகிற நிலைமைகளுக்கு மேற்சொன்ன வாக்கியம் வெகுவாகப் பொருந்தும். இதுபோன்ற சமயங்களில் பயிற்சிபெறாத நபர் முதலுதவி தருவது, நிலைமையை மேலும் மோசமாக்கி விடக்கூடும். மற்ற பயிற்சிகளைப் போல அவசர நிலைக்கு முன்பே இவற்றை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

பல நாடுகளில், அவசர ஊர்தி வந்து கொண்டிருக்கையிலேயே அவ்வூர்தியில் இருக்கும் சிலர் அடிப்படை முதலுதவி என்னென்ன செய்ய வேண்டுமென்று அடிபட்டவரை பார்த்து கொண்டிருப்பவரிடம் சொல்வார்கள். இப்பழக்கம் நம் நாட்டில் குறைவு என்பது வேதனைக்கு உரியது. இதற்கு முதலுதவி பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம்.

முதலுதவி அளிக்கும் திறமை பொதுவாக முதலுதவி பயிற்சி வகுப்புகளுக்குப் போவதில் கிடைக்கும். முதல் உதவி பயிற்சி செஞ்சிலுவை மற்றும் புனித ஜான் அவசர ஊர்தி போன்ற சமூக அமைப்புகள் மூலம் அடிக்கடி கிடைக்கும். (படிக்கும் காலத்திலேயே இதனை முறையாக கற்பது நல்லது). மேலும் கட்டணம் செலுத்தி கூட சில அமைப்புகளிலிருந்து இதை பெற்றுக் கொள்ளலாம். பல சமூக அமைப்புகள் தங்களது சமூக திட்டங்கள் முழுமையடைய ஒரு வர்த்தக சேவை, வழங்குகின்றன. பல சமூக அமைப்புகளும் கூட வணிகரீதியான பயிற்ச்சிகளை அளிக்கின்றன.

முதலுதவியை ஊக்குவிக்கும் விதத்திலும். அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் உலக முதலுதவி தினம் வருடாவருடம் கொண்டாடப் படுகிறது.

உலக முதலுதவி தினம் : 
செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாட படுகின்றது.

இப்போதெல்லாம் முதல் உதவிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மேலும் பல துறைகளில் எண்ணற்ற நாடுகளில் பல விதமான முதல் உதவிப் பயிற்ச்சிகள் மிகவும் கவனத்துடன் அளிக்கப்படுகின்றன.

மேற்கண்ட படி குறிப்பிட்ட துறைகளில் முதலுதவி ஒரு சிறு பார்வை :-
பின்குறிப்பு : கீழ் உள்ளனவற்றில் சில குறிப்பிட்ட துறைகளில் முதலுதவி அளிக்க கூடுதல் பயிற்சி தேவைப்படும்.

1. கடல்சார் முதலுதவி :  
இது கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும் பணியாளர்கள் மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் நபர்கள் ஆகியோர் தெரிந்துகொள்ள வேண்டிய முதலுதவி ஆகும். ஜப்பான் போன்ற நாடுகளில் இது அவசியம் போதிக்கப்படுகிறது.

2. போர்க்கள முதல் உதவி : 
ஆயுதம் பயன்படுத்தி ஒரு மோதல் நிகழும்போது, அதில் பாதிக்கப்படும் வீரர்கள் அல்லது அப்பாவி பொதுமக்களுக்கு அளிக்கும் முதலுதவி. ஒரு காலத்தில் வியட்நாமில் இது அதிகமாக போதிக்கப்பட்டது.

3. சூழற்சார் முதல் உதவி : 
பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுமெனில் (அதாவது நிலப்பகுதியின் காரணமாகவோ, தட்பவெப்பநிலை காரணமாகவோ அல்லது பிற காரணங்களாகவோ இருக்கலாம்) இம்முதலுதவி வழங்கப்பட வேண்டும். இவ்வகை முதலுதவி மூலம் காயப்பட்ட நபரை மணிக்கனக்கிலோ நாட்கணக்கிலோ பாதுகாக்க முடியும்.

4. ஹைட்ரோப்லூறிக் அமிலம் முதல் உதவி : 
இது இரசாயன தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆட்களுக்கு, ஹைட்ரோப்லூறிக் அமிலம் உடலில் பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திகொள்ள கற்றுத்தரப்படும் முதலுதவி ஆகும். அமெரிக்கா மற்றும் மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் இதற்கு வரவேற்பு அதிகம்.

5. மன நல முதல் உதவி : 
மனநிலை பாதிப்பது போன்ற தருணங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்படும் முதலுதவி ஆகும். மேலும் மனநோயின் முதல் அறிகுறிகளை கண்டறிவதையும் இது உள்ளடக்குகிறது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக