Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 மார்ச், 2018

போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க தேர்வை ஜெயித்து காட்டுங்க

போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க தேர்வை ஜெயித்து காட்டுங்க



டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இன்ஜினியரிங் மற்றும் லேப் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு பொது அறிவு பாடங்கள் நிச்சயம் தேவை. தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் வருடம் முழுவதும் நடக்கும். தேர்வை வெல்ல வேண்டிய பொறுப்புணர்வோடு அனைவரும் படித்து கொண்டிருப்பீர்கள் உங்களுக்கு உதவ  இங்கு கேள்விகளின் தொகுப்புகள் கொடுக்கின்றோம் படியுங்கள்.
படித்தலுடன் ரிவைஸ் செய்யும் பொழுது எளிதில் வெற்றி பெறலாம். 

1. ஹரப்பா தற்பொழுது எங்குள்ளது?1. ஹரப்பா தற்பொழுது எங்குள்ளது?
1. இந்தியா
2. பாகீஸ்தான்
3.  ஆப்கானிஸ்தன
விடை: 2. பாகீஸ்தான
விளக்கம் :
ஹரப்பா நகரம் தற்பொழுது பாகீஸ்தானில் உள்ளது. இந்நகரம் மொஹஞ்சதாரோவை விட சற்று பெரியது. ஹரப்பா மக்கள் எருதுகளை வணங்கினார்கள். பருத்தி பயிரிட்டனர். குதிரைபற்றி இவர்களுக்கு தெரியாது.

2. சிந்து நாகரிகத்தில் ஆலம்கீர் எந்த இந்திய நகரத்தில் உள்ளது?

1. மேற்கு உத்திர பிரதேசம்
2. ராஜஸ்தான்
3.  கிழக்கு உத்திர பிரதேசம்
விடை: 1. மேற்கு உத்திரபிரதேசம்
விளக்கம் : சிந்து சமவெளி நாகரிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது மேற்கு உத்திரபிரதேசத்தில் இருந்தது. இங்கு சிறப்பு வாய்ந்த கண்டுப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலம்கீர்பூர் சிந்து சமவெளி நகரங்களில் ஒன்றாகும்.

3. இந்தியாவின் உதவியாக் ஈரானில் எந்த துறைமுக பயன்பாடு துவக்கம் நடைபெறவுள்ளது?

1. சபாஹர் துறைமுகம்
2. வாஸ்ஸனார் நகர்
3. சாங்காய்
விடை: 1. சபாஹர் துறைமுகம்
விளக்கம் : இந்தியாவின் கடல்சார் அமைப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் ஈரான் நாட்டில் சபாஹார் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. ஈரானில் ஓமன் வளைகுடா பகுதியில் அரபிக் கடலை ஓட்டியுள்ள சபாஹார் பகுதியில் துறைமுகம் அமைக்கும் பணியை இந்தியா துவங்கியது. கடலோர காவல்படை  சுற்றுசூழல் துறை, கரையோர தொழில்சாலைகள் போன்ற சேவைகளை அமைக்கும் செயல்பாட்டினை இது அமைக்கும்.

4. முத்தலாக் தடைசெய்து வரைவு செய்துள்ள சட்டம் எது என அறிவோம்?

1. முஸ்லீம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு வரைவு சட்டம் வரைவு
2.   பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க திட்டம்
3. பாரம்பரியம் மிக்க் பெண்கள் திட்டம்
விடை: 1. முஸ்லீம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு வரைவு சட்டம் வரைவு
விளக்கம்
:
முத்தலாக் முறையை தடை செய்யும் வரைவு சட்டம் எனப்படும் முஸ்லீம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு வரைவு சட்டத்தை மத்திய அரசு தயாரிக்க உள்ளது.முத்தலாக தடை சட்டப்படி முத்தலாக முறையில் மனைவியை உடனடியாக விவாகாரத்து செய்யும் கணவருக்கு 3 ஆண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படும். காஷ்மீர் தவிர இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் இந்த சட்டம் அனைத்து மாநிலங்களின் கருத்துகள் கேட்க அனுப்பபட்டுள்ளது.

5. ஐஎன்எஸ் கல்வாரி நீர்முழ்கி கப்பலை இந்தியா எந்த திட்டத்தில் இணைத்தது?

1. ஸ்டார்ட் அப் இந்தியா
2. முத்ரா
3. மேக் இன் இந்தியா
விடை: 3. மேக்இன் இந்தியா
விளக்கம் : 
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஸ்கார்பியன் வகை நீர் மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் கல்வாரி ஆகும். இது பிரான்ஸ் நாடின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் முறைப்படி இனைத்தது.

6. நர்மதை - பார்வதி நதிநீர் இணைப்பு திட்டம் எந்த மாநிலத்தில் தயாரானது?

1. ராஜஸ்தான்
2. மத்திய பிரதேசம்
3. ஆந்திர பிரதேசம்
விடை: 2 மத்திய பிரதேசம் 
விளக்கம் 
:
மத்திய பிரதேச மாநிலத்தில் 7,456 கோடி செலவில் நர்மதஒ பார்வதி நதிநீர் இணைப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு மத்திய பிரதேச மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மால்வா பிராந்தியத்தில் இந்த திட்டம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும். ஒவ்வொரு கட்டமாக பணிகள் மெல்ல முடிவடையும்.

7. ரெயில் -2018 திட்டத்தின் நோக்கம் என்ன?

1. அதிநவீன ரயில் பெட்டிகளை தயாரிக்கும் திட்டம்
2. மெஜண்ட்டா மெட்ரோ ரயில் திட்டம்
3.  5 மாநிலங்களை இணைக்கும் நகரம் திட்டம்
விடை:1. அதிநவீன ரயில் பெட்டிகளை தயாரிக்கும் திட்டம் 
ரெயில் அமைச்சகம் ரெயில் 2018 என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் அதிநவீன ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் திட்டம் சென்னை ரெயில் பெட்டி தெழிற்சாலையில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

8. கங்கா கிரம் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

1 டெல்லி
2 ராஜஸ்தான்
3 பீகார்
விடை: 1 டெல்லி 
விளக்கம் 
: கங்கா கிராம் திட்டம் தூய்மை கங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கங்கை ஆற்றின் கரையோரமாக முழுமையான வளர்ச்சிக்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையாகும்.

9. வேலையில்லாத் திண்டாட்டம் நிலவும் 37 ஆசியநாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் பெறுகின்றது?

1. 7 வது இடம்
2. 14 வது இடம்
3. 12வது இடம்
விடை:3.12வது இடம் 
விளக்கம் : 
வேலையில்லா திண்டாட்டம் நிலவும் 37 ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 12வது இடத்தை பெற்றுள்ளது. 2017 இந்தியாவில் வேலையில்லாத திண்டாட்டம் 3.6% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூடானில் வேலையில்லாத் திண்டாட்டம் 204% எனவும் நேபாளில் 3.2 ஆகவும் உள்ளது.

10. பெண்களுக்கு பாதுகாப்பான பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் எது?

1. சென்னை
2.  பெங்களூர்
3.  டெல்லி
விடை: 1. சென்னை
விளக்கம் 
: சென்னை பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் பிடித்துள்ளது. 2016இல் பதிவாகிவுள்ள குற்ற ஆவண காப்பகத்தில் பதிவாகி உள்ள புள்ளிவிவரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக