ஜெர்னலிசம் படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலையில் வேலைவாய்ப்பு!
மதுரை : முதுநிலை இதழியல் முடித்தவர்கள் ஒப்பந்த முறையில் ஓராண்டிற்குள் சமூக வலைதளங்களில் பெண்கள் மீதான வன்முறை குறித்த ஆய்வுக்காக பணியமர்த்தும் அறிவிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 1ம் தேதியிட்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் அறிவியல் கம்யூனிகேஷன் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியை சேர்ந்த தேசிய பெண்கள் ஆணையம் ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன்படி இந்த திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான தற்காலிக பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. "சமூகவலைதளங்களில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறை என்ற பெயரில் இந்த ஆய்வானது நடக்கிறது."
மதுரைப் பல்கலையில் பணி
ஆய்விற்காக திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சியாளர், கள ஆய்வாளர், டைபிஸ்ட் உள்ளிட்ட பணிகளில் சேர விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜெர்னலிசம் பயின்றிருக்க வேண்டும்.
திட்ட ஒருங்கிணைப்பாளருக்கான தகுதி
நெட், செட், எம்.பில், பிஎச்டி முடித்தவர்களும் ஏற்கனவே இது மாதிரியான ஆய்வில் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன் உரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை ஓராண்டு மட்டுமே பணிக்காலம், மாத ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்படும்.
ஆராய்ச்சியாளர் பணிக்கான தகுதி
ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதுநிலை மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜெர்னலிசம் முடித்திருக்க வேண்டும். இவர்களுக்கான பணிக்காலம் 6 மாதங்கள்(செப்டம்பர் 18 முதல் பிப்ரவரி 2019 வரை). மாத சம்பளம் ரூ. 20,000.
கள ஆய்வு செய்வீர்களா?
கள ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜெர்னலிசம் முடித்திருக்க வேண்டும், தகவல் சேகரிப்பு மற்றும் களப்பணி செய்யும் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பணிக்காலம் 3 மாதங்கள் (செப்டம்பர் 2018 முதல் நவம்பர் 2018 வரை). மாத சம்பளம் ரூ. 10,000.
டைபிஸ்டடாக வாய்ப்பு
டைபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்எஸ் ஆபீஸ் மற்றும் டைபிங் தெரிந்த பட்டதாரிகளாக இருக்க வேண்டும். பணிக்காலம் 2 மாதங்கள்(ஜனவரி 2019 முதல் பிப்ரவரி 2019 வரை). மாத சம்பளம் ரூ. 8,000.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமிருப்பவர்கள் மார்ச் 15, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி டாக்டர். எஸ். ஜெபீனா, திட்ட இயக்குனர் NCW-MRP, தலைவர் , ஜெர்னலிசம் மற்றும் சயின்ஸ் கம்யூனிகேஷன் துறை, மதுரை காமராஜர் பல்பலைக்கழகம், பல்கலை நகர், மதுரை - 625021.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக