Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 மார்ச், 2020

ஒரு முறை வழிபட்டாலே போதும், குழந்தை வரம் அருளும் அற்புதக் கோவில்...


திருமணம் நடந்து பல வருடங்களாகியும் குழந்தையில்லாமல் இருக்கிறீர்களா ? அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள் ?. திருமணத்துக்கு பின்பு அனைவரது வீட்டிலும் ஆசைப்படுவது குழந்தைகளைத்தான். அதுலயும் பல வருடங்கள் குழந்தையில்லாத வீடுகளில் பெரும் போரே நடந்துவிடும். இதனால் கணவன் மனைவி பிரிவு, கருத்து வேறுபாடு என இருவருமே பாதிக்கப்படுகிறீர்களா நீங்கள் ?.
ஒரு வேலை அப்படி இருக்குமோ ?ஒரு வேலை அப்படி இருக்குமோ ?
குழந்தையில்லாத குடும்பத்தை பெரிதும் குறிப்பிட்டுச் சொல்வது தோஷங்கள் தான் இதுபோன்ற சங்கடங்களுக்கு காரணம் என்று. இதுபோன்ற குழந்தை பாக்கியத்தை தடுத்து நிற்கும் தோஷங்களில் இருந்து விடுபட என்ன செய்யுறதுன்னு தெரியலயா ?. கவலைய விட்டுட்டு இந்த கோவிலுக்கு குடும்பத்துடன் போய் வழிபட்டுட்டு வாங்க. சொல்லிவச்ச மாதிரி ஒரு சில மாதங்களிலேயே 'குவா... குவா...' தான்.


எங்கே உள்ளது ?எங்கே உள்ளது ?
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் சில கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே மலைமேல் அமைந்துள்ளது கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோலவே பல தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சுற்றுவட்டார மக்கள்.

தள வரலாறு








தள வரலாறு
சோழர் காலத்தை அடுத்து 16-ஆம் நூற்றாண்டு வரை திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளை ஆண்டு வந்தவர்கள் சம்புவராய மன்னர்கள். பிற்காலத்தில் ஆற்காடு, செங்கல்பட்டு உள்ளடக்கிய மாவட்டங்களை இராஜகம்பீரம் என்ற பெயரில் ஆன்டனர். சம்புவராயர்கள் படை வீட்டை தலைநகராகமாகக் கொண்டு ஆட்சி செய்த போது அவர்களால் பல கோவில்கள் கட்டப்பட்டது.

கோட்டை மலைக்கோவில்

கோட்டை மலைக்கோவில்

அப்படி கட்டிய கோவில்களில் சம்புவராய மன்னர் தன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் வேண்டி கட்டியதே கோட்டை மலை ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவில். மனதைக் கவரும் இயற்கை சூழலில், சீரும் சிறப்புமாய் விளங்கி வரும் இக்கோவில் மலையின் 2560 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக, காலை நேர கதிரவனின் ஒளி பெருமாளின் திருமுகத்தில் படும் காட்சி காண்போரை பரவச நிலையடையச் செய்யும்.



கோவிலின் சிறப்பு

கோவிலின் சிறப்பு

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் இக்கோவில் தளத்தில் அமைத்துள்ளது. ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இந்தப் பகுதியில் இருந்ததாகவும் சில ஆவணங்கள் மூலம் அறியப்படுகிறது. அதில், ரேணுகாம்பாள் அம்மன் மற்றும் இராமச்சந்திர சுவாமி திருக்கோவில் தவிர மற்ற கோவில்கள் அனைத்தும் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டன. இக்கோவில் இன்றளவும் தன் கம்பீரத்தை இழக்காமல் உள்ளது.



கோவிலிக் கட்டமைப்பு

கோவிலிக் கட்டமைப்பு

கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவிலின் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறத்தில் ஒரு திருச்சுற்றும் நான்கு மாடவீதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், முருகன் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர். திருச்சுற்றில் ரேணுகாம்பாள் அம்மன் சன்னதிக்கு அருக்கில் சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உட்பகுதியில் குளம் அமையப்பெற்றுள்ளது.



எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Map
சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வழியாக சுமார் 162 கிலோ மீட்டர் பயணித்தால் வேணுகோபால சுவாமி கோவிலை அடையலாம். திருச்சி எக்ஸ்பிரஸ், எல்டிடி காரைக்கால் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரயில்களும் திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.



சுற்றிலும் என்ன இருக்கு தெரியுமா ?

சுற்றிலும் என்ன இருக்கு தெரியுமா ?

கோட்டை மலைக் கோவிலைச் சுற்றிலும் அப்பகுதி முழுவதுமே நல்ல சுற்றுலாத் தலமாகத்தான் திகழ்கிறது. அதில், ஜவ்வாது போலூர் வனப்பகுதி, ஜவ்வாது மலை, ஏலகிரி, ஜமனமரதூர், கோமுட்டேரி, கோலப்பன் ஏரி படகு சவாரி, குள்ளர் குகை, கோளரங்கம் என பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உங்களது மனதைக் கொள்ளைகொள்ளும்.



ஜவ்வாது மலை

ஜவ்வாது மலை

ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இங்கு செய்யாறு, ஆரணியாறு, கமண்டலநதி, மிருகண்டாநதி போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் படவேட்டிற்கு அருகில் செண்பகாதோப்பு அணையும், மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்டாநதி அணையும் உள்ளது.



ஏலகிரி

ஏலகிரி

ஏலகிரி மலையில் அமைந்துள்ள மூலிகை மற்றும் பழ பண்ணைகள், பசுமை போர்த்திய வனக்காடுகள் உங்களது இந்தப் பயணத்தை முழுமைப் பெறச் செய்யும். இந்த மலையில் உள்ள அட்டாறு நதி மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களின் ஊடாக வருவதால் இதில் நீராட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். மேலும், ஏலகிரியில் இயற்கைப்பூங்கா, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி,
ஆஞ்சநேயர் கோவில், தாமரைக்குளம் உள்ளிட்டவையும் சிறந்த சுற்றுலர்த தலங்களாக விளங்குகின்றன.



பீமன் நீர்வீழ்ச்சி

பீமன் நீர்வீழ்ச்சி

ஜவ்வாது மலையில் உள்ள ஜம்னாமத்தூர் அருகே அமைந்துள்ளது பீமன் நீர் வீழ்ச்சி. சுமார், 80 அடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்த நீர் வரும் பாதை முதல் நீர் சென்று சேரும் இடம் வரை காட்டின் ஊடாக நடந்தே செல்லலாம். இது உங்களது மனதிற்கும், உடலிற்கும் சற்று ஓய்வழிப்பதோடு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.



காவனூர் தொலைநோக்கி மையம்

காவனூர் தொலைநோக்கி மையம்

ஜம்னாமத்தூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் காவனூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது தொலைநோக்கி மையம். ஆசியாவிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கி மையம் இதுதான் என்பது பெருமைக்குறிய விசயமாகும். வாரத்தில் சனிக்கிழமை மாலை 4 முதல் 6 மணி வரை மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆகையால் முன்கூட்டி திட்டமிட்டு இங்கு செல்ல வேண்டும்.



மர்ம குகைகள்

மர்ம குகைகள்

PC : Youtube
ஜவ்வாது மலையில் பட்டறைக்காடு என்ற பகுதியில் இரண்டு குன்றுகளை ஏறி இறங்கினால் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய குள்ள மனிதர்கள் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன. முற்றிலும் மலையில் காணப்படும் கற்கலால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த குகையின் உள்ளே அறைகள் இருப்பதையும் காணமுடியும். தற்போதும் இங்கு மூன்று அடி உயரமுள்ள குள்ள மனிதர்கள் வாழ்ந்து வருவதாக இந்தக் குளைகளுக்கு மர்மக் கதையும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக