உடலில் கல்லீரலை மையமாகக் கொண்டுதான் ரத்தம் ஓடுகிறது என்றார் கி.பி. 150-ஆம் ஆண்டில் வாழ்ந்த அறிவியல் அறிஞர் 'கேலன்'. 17-ஆம் நூற்றாண்டு வரை இது உண்மை என்றே மருத்துவர்கள் நம்பினர். 'வில்லியம் ஹார்வி' என்ற அறிவியல் அறிஞர் ரத்தம் இதயத்திலிருந்து தான் அனுப்பப்படுகிறது என்று கண்டுபிடித்துக் கூறினார்.
2. 1900 முதல் 1902-ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி இடம் பெற்றிருந்தது.
3. முதலையின் தொண்டையில் உள்ள பை போன்ற பகுதியில் நீரை மட்டும் தனியாக தடுக்க முடியும். இதானால் அது நிலத்தில் சாப்பிடுவதை போலவே நீருக்கடியிலும் சாப்பிட முடியும்.
4. ஹவாய் மொழியில் மொத்தம் 12 எழுத்துக்களே உள்ளன.
5. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் 'டக் ரெஸ்டாரண்ட்' ஒரே நேரத்தில் ஒன்பதாயிரம் பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியதாம்.
6. இந்தியாவில் காணப்படும் ஒரே வகை மனித குரங்கு கிப்பன்.
7. கடலில் வாழும் டால்பின் மீன்கள் அமெரிக்காவில் உள்ள கடல் ஆராய்ச்சி நிலையங்களில் உதவியாளர்களாகப் பணி செய்கின்றன. கடலுக்குள் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு கரையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் கருவிகளை எடுத்துச் சென்று கொடுக்கின்றது.
சில சமயம் கடலுக்குள் வழி தவறவிட்ட ஆராய்ச்சியாளர்களைக் கண்டு பிடித்து வழிகாட்டி அவர்கள் ஆராய்ச்சி செய்யும் இடங்களை அடைய உதவுகிறது.
8. முதன்முதலில் இந்தியாவில் நெடுஞ்சாலை அமைத்த ஆங்கிலேய கவர்னர் டல்ஹெளசி.
9. கடல் பறவையின் குஞ்சுகள் தன் தாயின் அலகிலுள்ள சிவப்பாயிருக்கும் ஓர் இடத்தைக் கொத்துமாம். இதுதான் தாய்க்கு குஞ்சுக்கு உணவு வேண்டும் என்ற அறிகுறி. உடனே, தாய், தன் உணவுக்குழலிலிருந்து உணவை குஞ்சுக்கு ஊட்டுமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக