தேவையானப் பொருட்கள்:
- புடலங்காய் குடல் – 2 கப்
- புளி – நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2, 3
- பச்சை மிளகாய் – 1
- உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
- கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
- பெருங்காயம்
- கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
- கொத்தமல்லித் தழை
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- புடலங்காய் நறுக்கும்போது உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், புளி, என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- தனியாக பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் புடலைக் குடலையும் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கினால் லேசாகச் சுண்டி தண்ணீர் விட்டிருக்கும்.
- வறுத்த பருப்புக் கலவையை உப்பு சேர்த்து அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
- அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை, வதக்கிய குடல் பகுதியைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் துவையல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக