Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 13 மே, 2018

Bar code (பட்டைக்குறி)

நாம் வாங்கும் எல்லா பொருட்களிலும் நீங்காத இடம்பிடித்துவிட்ட “Bar Code”(தமிழில் ”பட்டைக்குறி”), அமெரிக்காவில் ரயில் பெட்டிகளை அடையாளம் கண்டுபிடிக்க முதன்முதலில் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால், சூப்பர் மார்கெட்டுகளில், தினசரி வாங்கும் பொருட்களில் அச்சடிக்கப்பட்ட பிறகுதான், அவை அதிகம் வெளியுலகிற்குத் தெரிய வந்தன.


“Bar Code Scanner” கருவிகொண்டு முதன்முதலில் ஸ்கேன் செய்யப்பட்ட பொருள் Wrigley’s Juicy Fruit gum பாக்கெட். 1974ஆம் ஆண்டு அமெரிக்காவின் ட்ராய் நகரத்திலிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல் நடந்தது.

barcode.jpg?w=300&h=90

பலவகையான Bar Code இருந்தாலும், Universal Product Code(UPC) என்ற Bar Code தான் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. இந்த வகை Bar Codeஇல் இருக்கும் கருப்புப் பட்டைகளின் அகலமும், பட்டைகளுக்கிடையே இருக்கும் இடைவெளியும் தான் ஸ்கேன் செய்யப்படுகிறது. இவற்றின் உயரத்தைப் பதிவு செய்யவேண்டும் என்பது அவசியமில்லை.

சாத்தான்/பேய்/தீய சத்தி இவற்றைக் குறிக்கும்( :o) 666 என்ற எண்கள் Bar Codeஇல் ஒளிந்துகொண்டிருப்பதாக ஒரு கதை உண்டு. இது கதையல்ல நிஜம் என்று சொல்லவும் ஒரு க்ரூப் இருக்கிறது. பாவம்..அப்பாவி கம்ப்யூட்டர்களுக்கு இந்த 666 கதையெல்லாம் தெரியாததாலோ என்னவோ, இன்றுவரை  எந்தப்பிரச்னையும் செய்யாமல் அவையெல்லாம் சமத்தாக வேலை செய்கின்றன. :lol3:

ஒன்று தெரியுமா? ஒரு UPC Bar Codeஇல் முதல் மூன்று கருப்புப் பட்டைகளும் அதன் கீழ் உள்ள 3 எண்களும், குறிப்பிட்ட அந்தப் பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இதில் இந்தியாவிற்கான எண் 890.  உடனே, அருகிலிருக்கும் பொருளை எடுத்துப்பார்த்திருப்பீர்களே.. 









,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக