Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 மே, 2018

இதே நாளில் அன்று,

மே 15 கிரிகோரியன் ஆண்டின் 135 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 136 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
1525 – ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.

1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.

1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.

1756 – இங்கிலாந்து பிரான்சின் மீது போரை அறிவித்ததில் ஏழாண்டுப் போர் ஆரம்பமாயிற்று.

1792 – பிரான்ஸ் சார்டீனியப் பேரரசு மீது போரை அறிவித்தது.

1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.

1851 – நான்காவது ராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.

1860 – கரிபால்டியின் படைகள் சிசிலியின் நேப்பில்ஸ் நகரைக் கைப்பற்றினர்.

1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.

1915 – இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஷவ்கத் அலியும் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

1918 – பின்லாந்து உள்நாட்டுப் போர் முடிவுற்றது.

1919 – துருக்கியின் இஸ்மீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.

1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

1932 – ஜப்பானியப் படையினர் ஷங்காயை விட்டுப் புறப்பட்டனர்.

1932 – ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.

1935 – மொஸ்கோவில் சுரங்க தொடருந்து சேவை ஆரம்பமானது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் போருக்குப் பின்னார் டச்சுப் படைகள் நாசி ஜெர்மன் படைகளிடம் சரணடைந்தனர்.

1940 – மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது.

1948 – இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவுதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.

1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.

1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.

1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.

1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.

1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.

1972 – 1945 முதலை ஐக்கிய அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஓக்கினாவா தீவு மீண்டும் ஜப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.

1978 – டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது
1985 – குமுதினி படகுப் படுகொலைகள்,

1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

1988 – எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.

1991 – ஈடித் கிரெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்ட நாள் இன்று.. மே 15

சென்னை: ஜப்பானின் பிரதமர் இனூக்காய் த்சுயோஷி 1932ஆம் ஆண்டு மே 15 நாள் அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் கொல்லப்பட்டார்.

ஜப்பான் பிரதமராக 1931ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி இனூக்காய் த்சுயோஷி 
பதவியேற்றார். 1932 ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அவர் கொல்லப்பட்டார்.
அரசுக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதற்காக 1932ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி 11 கடற்படை அதிகாரிகளால் இனூக்காய் த்சுயோஷி சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • 1958 - சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1963 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.
  • 1940 - மக்டொனால்ட்ஸ் தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் ஆரம்பித்தது.




















பிறப்புக்கள்
1859 – பியேர் கியூரி, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)

1912 – இராமசுவாமி ஐயர் (புளிமூட்டை), நகைச்சுவை நடிகர்.

1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ்திரைப்பட பாடலாசிரியர். (1973)

1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)

1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி.

இறப்புகள்
1978 – ரொபேர்ட் மென்சீஸ், ஆஸ்திரேலியாவின் 12வது பிரதமர் (பி. 1894)

சிறப்பு நாள்
சர்வதேச குடும்ப தினம்

பராகுவே – விடுதலை நாள் (1811)

மெக்சிகோ – ஆசிரியர் நாள் (Día del Maestro)

தென் கொரியா – ஆசிரியர் நாள் (스승의 날)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக