Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 செப்டம்பர், 2018

இதே நாளில் அன்று


உலக வரலாற்றில் இன்று - செப்டம்பர் 08!!
முத்தான சிந்தனை துளிகள் !
'நல்ல யோசனை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள். ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது."தேசிய கண் தான தினம்



👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 25-ல் ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8-ல் முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்திய அரசு சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.
உலக எழுத்தறிவு தினம்


📝 உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செப்டம்பர் 8ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📝 1965ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில்தான் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.

📝 தனி மனிதர்களுக்கும், பல்வேறு வகுப்பினருக்கும், சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதன்மையானது என்பதை எடுத்துரைப்பதே இந்நாளின் குறிக்கோள் ஆகும்.
உலக முதலுதவி தினம்


🚔 உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (08.09.2018) அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு, கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களை காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கடைபிடித்து வருகிறது.
தேவன்


✍ பிரபல நகைச்சுவை எழுத்தாளருள் ஒருவரான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்தார்.

✍ இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வெளிவந்துள்ளது. இவர் சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார்.

✍ இவர் வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராக பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகின் சார்லஸ் டிக்கன்ஸ் என்று இவரை அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.

✍ கால் நூற்றாண்டு காலத்து கதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதிக் குவித்தார். உலக விஷயங்களை யதார்த்தமான, கதைப்போக்காக மாற்றி உள்ளங்களில் புகுத்திய தேவன் தனது 43வது வயதில் (1957) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்

2008ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் மறைந்தார்.
1926ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நாடுகளின் கூட்டமைப்பில் (டுநயபரந ழக யேவழைளெ) ஜெர்மனி சேர்ந்தது.
1991ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி யுகொஸ்லாவியாவிடம் இருந்து மாசிடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக