Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

தயவு செய்து இந்த 12 திரைப்படங்களை பார்க்க வேண்டாம்..!

அனிமேஷன் தொழில்நுட்பம் - திரைத்துறைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். பொதுவாக அனிமேஷன் படங்களை குழந்தைகளுடன் சேர்ந்து பெரியவர்களும் 'வாயை பிளந்து கொண்டு' பார்ப்பார்கள். அப்படியாக பெரியவர்களையும் குழந்தைகளாய் மாற்றுவது தான் ஒரு நல்ல அனிமேஷன் திரைப்படத்தின் வெற்றியாகும்..!

ஆனால், சில அனிமேஷன் திரைப்படங்கள் இருக்கிறது, அவைகளை குழந்தைகள் கூட பார்க்க மாட்டார்கள், பார்த்தாலும் ஒன்றுமே புரியாது. அப்படியாக, 'இதோ நானும் அனிமேஷன் படம் ஒண்ணு எடுக்குறேன் பாரு,,!" என்று எடுக்கப்பட்ட மோசமான 12 அனிமே ஷன் திரைப்படங்களின் பட்டியல் இதோ..!
3-வது இடத்தில் இருக்கும் திரைப்படம்.. "அட இதுவுமா..!" என்று உங்களை கடுப்பாக்கும் என்பது உறுதி..! (பின்குறிப்பு : மோசமான அனிமேஷன் திரைப்படங்கள் என்று பட்டியல் போட்டது நாங்க இல்லீங்க, திரை விமர்சகர்கள் தாங்கோ..!)

12. தி டென் கமாண்ட்மன்ட்ஸ் (The Ten Commandments) :

12. தி டென் கமாண்ட்மன்ட்ஸ் (The Ten Commandments) :

இந்த படம் எங்கு தேடினாலும் கிடைக்காதாம். அப்படியான ஒரு படுதோல்வியாம் இந்த படம்..!

11. தி கிங் அண்ட் ஐ (The king and I) :

வரலாற்றை மையமாக்கி எடுக்கப்பட்ட இந்த படத்தில் சுவாரசியம் துளி கூட இருக்காதாம்..!

10. தி பவுண்ட் பப்பீஸ் மூவி (The Pound Puppies Movie) :

படத்தில் இசையை தவிர வேறு ஒரு சிறப்பும் இல்லையாம்..!

09. தி டால்பின் : ஸ்டோரி ஆஃப் ஏ டிரிமர் (The Dolphin: Story of a Dreamer ) :

3டி சாப்ட்வேரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாதவர்கள் எடுத்த படம் போல் இது இருக்குமாம்..!

08. டைட்டானிக் : தி லேஜன்ட் கோஸ் ஆன் (Titanic: The Legend Goes On) :

அரைகுறையாக உருவாக்கப்பட்ட அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் நிறைந்த படமாம் இது..!

07. தி ஸ்வான் பிரின்சஸ் கிறிஸ்ட்மஸ் (The Swan Princess Christmas) :

மோசமான 'மேக்கிங்' விருதை இந்த படத்திற்கு கொடுக்கலாம் என்கிறார்கள் விமர்சகர்கள்..!

06. ஃபுட் ஃபைட் (Food Fight) :

குழந்தைகள் கூட பார்க்க விரும்பாத அனிமேஷன் படங்களில் இதுவும் ஒன்றாம்..!

05. டிஸ்க்கோ வார்ம்ஸ் (Dixco worms) :

பின்னணி குரல் கூட பொருந்தாத வண்ணம் எடுக்கபட்ட மோசமான அனிமேஷன் படம் இதுவாம்.

04. கியாரா தி ப்ரேவ் (Kiara the Brave) :

இந்த அனிமேஷன் படங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற உங்கள் பட்டியலில் இந்த படம் இருந்தால் தயவு செய்து அதை அழித்து விடுங்கள்..!

03. ஷ்ரெக் தி தேர்ட் (Shrek the Third) :

ஷ்ரெக் வரிசையில் மிகவும் போர் அடிக்கும் படம் இது. ஷ்ரெக் குழந்தை, பின் அந்த குழந்தையின் குழந்தை என்று.. படம் எடுக்க வேண்டுமே என்று எடுத்தால் யாருக்குத்தான் பிடிக்கும்..?!

02. ஃபைனல் ஃபேன்டசி (Final Fantasy) :

நிஜ மனிதர்களை போலவே காட்சியளிக்கும் அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் கொண்ட இந்த படத்தில் கடைசி வரைக்கும் கதையே புரியாதாம்.!

01. ஹுட்வின்க்டு (Hoodwinked) :

இதில் கதை குறைவாம், அதைவிட கிராஃபிக்ஸ் பயன்பாடு மிக மிக குறைவாம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக