Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

வரலாற்றில் இன்று - செப்டம்பர் 11!!


இன்றைய பொன்மொழி
'யாரையும் அற்பமாய் கருதிவிடாதே... அவர்களே நாளை அற்புதங்களை நிகழ்த்திவிடக் கூடும்.."வினோபா பாவே



🏁 சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.

🏁 இவர் 'மகாராஷ்டிர தர்மா" என்ற மாத இதழை 1923-ல் தொடங்கினார். கதர் ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.

🏁 தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இங்கு, கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதை புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். 'பூதான்" எனப்படும் பூமிதான இயக்கத்தை தொடங்கினார். எனவே, இவர் பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

🏁 இவர் 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார்.

🏁 'என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர்" என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும், தலைவர்களாலும் 'ஆச்சார்யா" என்று போற்றப்பட்ட வினோபா பாவே தனது 87வது வயதில் (1982) மறைந்தார்.
ஹிரோஷி அமனோ


🏆 டுநுனு விளக்கை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுள் ஒருவரான ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஹிரோஷி அமனோ 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

🏆 இவர் 2014ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அகசகி, சுச்சி நாகமுரா ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார்.

🏆 இந்த நோபல் பரிசானது திறன்மிக்க நீலநிற ஒளியுமிழி அல்லது ஒளியீரி  என்னும் குறைக்கடத்தி கருவியை கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டது.


✍ 1862ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஆங்கில எழுத்தாளர் ஓ ஹென்றி, வட கரோலினாவில் உள்ள கிரீன்ஸ்போரோ என்னும் இடத்தில் பிறந்தார்.

🎌 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தமிழ் கவிஞர், சுப்பிரமணிய பாரதியார் மறைந்தார்.

👉 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா மறைந்தார்.

✍ 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.

🌐 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக