Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

கண்ணடிச்சா இப்போ காசு போகும்

Related image



பாட்சா படத்துல நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் பாடல் இடையில் ஒரு வரி வரும் "கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க"  ஆனா இப்போ கண்ணடிச்சா காசு போகும்னு சொல்றோம்


அட அது எப்படி? நான் கண்ணடிச்சா காசு போகும்னு கேக்குறவங்களுக்கு தான் இந்த பதிவு சரி வாங்க நாம அத பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாம்...


பரிணாமங்கள் :

மனிதன் ஆரம்ப காலங்களில் தனக்கு தேவையான பொருள்களை வாங்க   பண்டமாற்று முறையை கண்டுபிடித்தான் பின்பு நாகரீகம் வளர வளர பண்டமாற்று முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து பொருள் வாங்க / விற்க ஆரம்பித்தான்

பணமும் பல்வேறு பரிணாமங்கள் எடுத்து தங்கம் வெள்ளி செப்பு என பலதரப்பட்ட காசுகளாக பிரிந்து இருந்தன.அதுவும் சில காலங்களில் மாறிவிட நாம் இப்பொழுது இருக்கும் பணம் நடைமுறையில் வந்தது

பணமில்லா பரிவர்த்தனை:
சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த நவீன யுகத்தில்  பணமில்லா பரிவர்த்தனை என்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை Image result for paytm

2010-ல் ஆரம்பிக்கப்பட்ட PayTM ஆனது மெதுவாக வளர்ந்து வளர்த்து இன்று தனக்கென ஒரு இடத்தை அது பிடித்துள்ளது PayTM  தான் இந்தியாவின் முதல் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்திய செயலி PayTM தொடர்ந்து பல்வேறு செயலிகள் வந்தாலும் PayTM தனக்கென ஒரு இடத்தை நிலையாக பிடித்துக்கொண்டது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகள் அறிவித்த PayTM தனது வங்கி சேவையை ஆரம்பித்ததுதொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வந்தாலும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதில் உறுதியாக உள்ளது


புதிய தொழில்நுட்பம்: 

முன்பு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை பொருள் வாங்கிய கடையில் தேய்த்து பணம் செலுத்த வேண்டும்  சில காலங்கள் கழித்து virtual என்ற புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்க பட்டது இதன் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை கையில் எடுத்து செல்லாமல் மொபைல் மூலம் பணம் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டது


PayTM இப்பொழுது அது போன்ற ஒரு புதிய தொழில்நுட்பதில் தான் இறங்கி உள்ளது அதாவது Face recognition என்ற தொழில்நுட்பத்தை பற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ளது 



Image result for face recognition

இதன் மூலம் இனி வரும் காலங்களில் PayTM வாடிக்கையாளர்கள் இனி தங்களது கண்ணை சிமிட்டினாலோ (அ) அடித்தாலோ உங்களது PayTM கணக்கில் இருந்து பணம் வரவு வைக்கப்படும் வகையில் இந்த ஆய்வானது நடைபெற்று வருகிறது.

 அப்போ இனிமே PayTM கொஞ்சம் உஷாரா தான் பயன்படுத்தனும் போலயே...







































.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக