Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 செப்டம்பர், 2018

வார சந்தையும் வெளி வரா உண்மையும்

Image result for vara santhai
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்காக அறிமுக படுத்திய திட்டங்களில் ஒன்று அம்மா வாரச் சந்தை




Error loading player:
Network error
இந்த அம்மா வாரச் சந்தைகளில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கலாம். ஒரே இடத்தில் பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி செல்லக்கூடிய வகையில் இந்த வாரச்சந்தை அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று இந்த வாரச்சந்தைகளின் நிலையோ வேறு  ஆம் இதில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க கொண்டு வரப்பட்ட திட்டமே இந்த வார சந்தை ஆனால் இதிலும் அரசியல் தலையீடு உள்ளதென்றால் நம்ப முடிகிறதா ?
இந்த வார சந்தை தொடங்கப்பட்ட நாட்களில் மக்களின் வரவேற்பை பெற்று தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு சென்றனர் வாரம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஊரின் ஒரு பகுதியில் இந்த சந்தையானது அமையும் மக்களும் நேரடியாக சென்று தங்களுக்கு தேவையானா காய்கறிகளை வாங்கி கொண்டு மகிழ்வுடன் திரும்பினார் 
பொதுவாக இந்த வார சந்தைகள் நடைபெறும் இடமானது அரசுக்கு சொந்தமான இடமாக இருப்பதில்லை என்பதே இதில் பெரும் வேதனை இதனை பயன்படுத்தியே சில அரசியல் புள்ளிகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில சந்தையை ஆரம்பிக்க விட்டு இப்பொழுது அதில் லாபமும் பார்க்கிறார்கள்..
  நகரங்களை விட கிராமங்களில் அதிகம் களைகட்டிய இந்த வார சந்தையானது இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக களையிழந்து வருகிறது இதற்கு காரணமும் அரசியல்வாதிகள் தான்.

ஒரு நாள் வார சந்தைக்கு கடை வைக்கவேண்டும் எனில் இடத்திற்கு ரூபாய் 150 முதல் 350 வரையும் 4கிலோ காய்கறியும் கொடுக்க வேண்டும். இது அவர்களது சொந்தக்காரர்கள் அங்காளி பங்காளி என அனைத்து வீடுகளுக்கும் செல்ல வேண்டும் இல்லை எனில் அங்கு கடை வைக்க முடியாது   இன்னும் சில இடங்களில்  மாத சாந்த போன்று  முன்பணமாக கொடுத்திட வேண்டும். அவ்வாறு கொடுத்தவர்களுக்கே இடம் கொடுத்து ஒவ்வொரு சந்தை நடைபெறும் போது  காய்கறிகள் அவர்களது வீடு தேடி சென்று கொடுக்க வேண்டும்..

முறையான திட்ட வரைவுகள் இல்லாமல் செயல்படுத்தப்படும் இந்த மாதிரியான திட்டங்களில் கூட சில அரசியல்வாதிகள் தங்களால் முடிந்த லாபத்தை பார்க்கின்றனர்.
வார சந்தை நடைபெறும் நாளில்  டீ ,பலகாரம் போன்று விற்பனை செய்ய வரும் சிறு வியாபாரிகளையும் இவர்கள் விட்டப்பாடு இல்லை டீ விற்பவர்களிடம் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பெறப்பட்ட பின்னரே அவர்கள்  அங்கு விற்பனை செய்ய அனுமதிக்க படுகின்றனர் 
 இதன் காரணமாகவே பெரும்பாலான வியாபாரிகள் வார சந்தைக்கு வருவதை தவிர்க்கின்றனர் 

அரசு இதை  கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு சிறு குறு தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் ஏற்கனவே பல இன்னல்களுக்கு ஆளாகி அழிந்து வரும் விவசாயத்தையும் ஒரு சில பேர் தங்கள் சுயலாபத்திற்காக மேலும் இன்னலுக்கு ஆளாக்குவது எந்த வித நியாயம் என தெரியவில்லை 

இதற்கான தகுந்த நடவடிக்கையை அரசு முன்னெடுக்குமா? என்பதே இங்கே கேள்வி குறியாய் உள்ளது..  











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக