Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 செப்டம்பர், 2018

இதே நாளில் அன்று,


செப்டம்பர் 10 - இன்று வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் !!
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !
'நட்பு என்பது ஆரோக்கியம் போன்றது.. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.."உலக தற்கொலை தடுப்பு தினம்




🚫 உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

🚫 தற்கொலையை தடுப்பதற்காக சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்த தினத்தை பிரகடனம் செய்தது.

🚫 கடந்த 2011-ம் ஆண்டில் சுமார் 40 நாடுகள் உலக தற்கொலையை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

🚫 தற்கொலை செய்வதை தடுக்க அதை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால்தான் இந்த கொடிய நோயை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.
குன்பெய் யோகோய்


🎮 ஜப்பானிய வீடியோ விளையாட்டு வடிவமைப்பாளர், குன்பெய் யோகோய் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார்.

🎮 கேம் பாய் (புயஅந டீழல) என்ற வீடியோ விளையாட்டு சாதனத்தை உருவாக்கியவர் இவர்தான்.

🎮 குன்பெய் யோகோய் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஜப்பானில் மறைந்தார். 2003ஆம் ஆண்டு, யோகோய் மறைந்த பின்னர் சர்வதேச விளையாட்டு உறுப்பினர்கள் சங்கம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.
முக்கிய நிகழ்வுகள்

✍ 1862ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி நற்றிணைக்கு உரை எழுதிய தமிழறிஞர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூரில் பிறந்தார்.

👉 1839ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி அமெரிக்க தத்துவவாதி, கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானி சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ், கேம்பிரிட்ஜில் பிறந்தார்.

🏁 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி இந்தியாவின் ஐந்தாவது துணை குடியரசு தலைவர் பசப்பா தனப்பா ஜாட்டி (டீ.னு.துயவவi) கர்நாடகாவில் பிறந்தார்.

🎹 1846ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி எலியாஸ் ஹோவே (நுடயைள ர்ழறந), தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்.

🎬 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன்முதலில் தயாரித்த ஏ.கே.செட்டியார் மறைந்தார்.

🌎 1858ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி 55 பண்டோரா என்ற சிறுகோளை புநழசபந ஆயசல ளுநயசடந என்பவர் கண்டுபிடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக