Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 செப்டம்பர், 2018

புரட்டாசியில் அசைவம் தவிர்த்து சைவம் மட்டும் சாப்பிடுவது ஏன் தெரியுமா?

புரட்டாசி பிறந்து விட்டது... காலையிலேயே பெருமாள் கோவில்களில் பலரும் நாமத்துடன் வலம் வந்ததை காண முடிந்தது. காய்கறி கடைகளில் மக்கள் கூட்டமும், அசைவ கடைகளில் ஈக்களும் மொய்த்து வருகின்றன. ஆடு, கோழிகள் எல்லாம் டென்சன் இன்றி கிராம வீதிகளில் வலம் வருகின்றன.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு காரணமாக ஜோதிட ரீதியாக பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.
Vegetarian food eats during Purattasi month
ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.
புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர். புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.
கன்னி ராசி காலப்புருஷ ராசி சக்கரத்தின் படி மேஷ ராசிக்கு 6 ஆம் வீடாகிய கன்னி ராசி. ருண ரோக ஸ்தானம் என்பதால் இம்மாதத்தில் வயிறு சம்பந்தமான அஜீரணம் பிரச்சினைகள் அதிகரிக்கும். உடல் வெப்ப நிலையும் அதிகரிப்பதோடு பித்தம் அதிகரிக்கும். இதனால் இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும், வயிறு பிரச்சினைகள் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து மகாவிஷ்ணுவை வணங்குவதோடு உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய் கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.
அது மட்டுமல்லாது புரட்டாசி மாதம் நவராத்திரி பண்டிகை நடைபெறுகிறது. மகாளய பட்சம் 16 நாட்கள் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள். இந்த காலத்தில் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு சாப்பிடுவதே அனைவருக்கும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக