Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 22 செப்டம்பர், 2018

மனித இனம் தெரிந்துக்கொள்ள விரும்பாத 'கொடூரமான' சோதனைகள்..!


நாம் வரலாறு என்று படிக்கும் பக்கங்களில் முக்கால்வாசி பக்கங்கள் பொய்களால் உருவாக்கம் பெற்றது, குறிப்பாக வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான அறிவியல் தொழில்நுட்ப சோதனைகள் பற்றிய நிஜமான தகவல்கள் எல்லாமே மறைக்கப்படுகிறது என்பது தான் நிதர்சனம்.
அப்படியாக, மனித இனம் தெரிந்துக்கொள்ள கூடாது என்பதை மனதில் வைத்து சில கொடூரமான சோதனைகள் வரலாற்று பக்கங்களில் நிகழ்ந்துள்ளன. அவைகளைப்பற்றிய தொகுப்பே இது..!



திகிலூட்டும் சோதனை #10 :

#1

ப்ராஜக்ட் ஸ்ட்ராம்ப்ரீ (Project Stormfury)

#2

அமெரிக்க அரசால் 1940-களில் இரவின் லாம்கோர் என்ற ஆய்வாளரின் கீழ் நடைபெற்ற இந்த சோதனையில், ஐஸ் கிரிஸ்டல்களை பயன்படுத்தி சூறாவளியை சக்தி இழக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன.

#3

சூறாவளி ஒன்றின் போது இதை சோதனை செய்யும் நோக்கத்தில் விமானம் மூலமாக ஐஸ் கிரிஸ்டல்களை சூறாவளிக்கு எதிர்பக்கம் கொட்ட அது கடலில் இருந்து நகர்ந்து நகரத்திற்குள் சென்று உயிர் மற்றும் பொருள் நாசம் செய்தது.

#4

எலிபெண்ட் அண்ட் அசிட் (Elephant and Acid)

#5

ஆண் யானைகளின் நடத்தையைப் பற்றிய ஆய்வான இதில் ஆண் யானை ஒன்றிற்க்கு லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு என்ற போதை மருந்து கொடுக்கப்பட்டது. சாதரணமான மனிதனுக்கு கொடுக்கப்படுவதை விட 3000 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டது.

#6

போதை செலுத்தப்பட்ட பின்பு வெறி பிடித்து திரிந்த அந்த ஆண் யானை, பரிசோதனைக்கு பின்பு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இறந்து போனது.

#7

ஹார்ட் ஸ்டாப்பிங் (Heart Stabbing)

#8

ஒருவர் பிறர் இதயத்தை கத்தியால் குத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள், தன் இதயத்தையே கத்தியால் குத்தியதை கேள்விப்பட்டு இருக்கீர்களா அவர் தான் ஜெர்மனை சேர்ந்த வெர்னர் தியோடர் ஓட்டோ பிரோஸ்மான், அறுவை சிகிச்சை பயற்சி பெற்றவர்.

#9

தனக்கு தானே மயக்க மருந்து செலுத்தி தன் இதயத்தையே அறுவை சிகிச்சை செய்து, எப்போது வேண்டுமானால் உயிர் இழக்கலாம் என்ற நொடிகளை கடந்து இதய சிலாகையேற்றல் என்பதை பற்றிய புரிதலை அதிகம் பெற்று சாதனை புரிந்தார். 1956 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

#10

நாஜி சோதனைகள் (Experiments by Nazi)

#11

நாஸி படையினர் அரங்கேற்றிய விபரீதமான பரிசோதனைகள் ஆயிரம். மனிதர்கள் தான் நாஸிக்களின் பரிசோதனை எலிகள்..!

#12

அப்படியான பரிசோதனைகளில் சில மனிதர்கள் பனியில் வைக்கப்பட்டனர், சில சோதனைகள் மூலம் மனிதர்கள் உறுப்புகளையும் உயிர்களையும் இழந்தனர், மேலும் பலர் மனநிலை பாதிப்படைந்தனர்.

#13

ரஷியன் போர்ஹோல் (Russian Borehole)

#14

சுமார் 40,000 அடி ஆழம் தோண்டப்பட்ட போர்வெல் சோதனை. இது பல்வேறு அதிநவீன உபகரணங்கள் கொண்டு 1970-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி அன்று தொடங்கியது.

#15

பல்வேறு புவியியர்பியல் ஆய்வுகள் நடத்த உருவாக்கப்பட்ட இந்த செயற்கையான போர்வெல் ஆனது பூகம்பங்கள் மற்றும் மற்ற இயற்கை சீற்றங்களை உண்டாக்கும் என்பதால் நிறுத்தப்பட்டது.

#16

ஹாட்ரான் கொல்லிடர் (Hadron Collider)

#17

சுவிட்சர்லாந்து நாட்டின் நிலத்தடியில் உள்ள உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பார்டிகில் கொல்லிடர் இதுவாகும். நிலத்தடியில் சூமார் 27 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இவ்விடத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10,000 விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.

#18

சில விஞ்ஞானிகள் இது உலகை அழிக்கும் வல்லமை பெற்றது இதன் பெரும் வெடிப்பானது உலகை அழிக்கும் அல்லது பிளாக் ஹோல்தனை உருவாக்கும் என்றும் நம்புகின்றனர்.

#19

ஸ்டார்பீஷ் ப்ரைம் (Starfish Prime)

#20

1962-ஆம் ஆண்டு, ஜூலை 9-ஆம் ஆம் தேதி ஐக்கிய அமெரிக்கா பூமியின் காந்த புலத்திற்கு வெளியே நடத்திய அணு ஆயுத சோதனை.

#21

சுமார் 1.4 மெகாடன் டிஎன்டி பயன்படுத்தப்பட்ட இந்த வெடிப்பு சோதனைக்கு பின்னர் பூமியின் காந்தப்புலம் கிட்டத்தட்ட நிலை குலைந்தது என்று கூறப்பட்டது.

#22

மறுவாழ்வு (Live Again)

#23

எதிர்ப்பு கொகுலண்ட்ஸ் மற்றும் எப்பிநெப்பிரின் செலுத்தினால் இறந்த உடலுக்குள் இரத்த ஓட்டம் நிகழும் என்று சோதனை செய்தார், ராபர்ட் ஈ கார்னிஷ்.

#24

இவரின் அனைத்து சோதனைகளும் தோல்வியில் முடிய இரண்டு நாய்களை மட்டும் சிறிது நேரம் உயிர்பிழைத்திருக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#25

கன்ட்ரோலிங் தி மைண்ட் (Controlling the Mind)

#26

மனதை கட்டுப்படுத்தும் யோசனை என்பது ஒரு அழகான, அதே சமயம் மிகவும் பயங்கரமான யோசனையாகும். முதலில் ஸ்பானிஷ் பேராசிரியர் ஆன ஜோஸ் டெல்கடோ மனதை கட்டுப்படுத்தும் ஒரு நுட்பத்தை உருவாக்கினார்.

#27

விலங்குகளின் மூளையோடு நிகழ்த்தப்பட்ட இந்த மனதை கட்டுப்படுத்தும் சோதனை மூலம் விலங்குகளின் கால்களை அசைக்க முடிந்தது. ஆனால் விலங்குகளுக்கு மிக மோசமான பின் விளைவுகள் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

#28

நுக்லியர் டெஸ்ட் (Nuclear Test)

#29

பூமி கிரகத்தில் நிகழ்த்தப்பட்ட மிகவும் மோசமான சோதனைகளில் எப்போதுமே அணு ஆயுத பரிசோதனைக்கு தான் முதல் இடம். ஏனெனில் அணு ஆயுதத்திற்கு தான் மனித இனத்தை அழிக்கும் வல்லமை உண்டு.

#30

1945-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட சோதனை இது. சுமார் 20,000 டன் டிஎன்டி பயன்படுத்தப்பட்ட, மிகவும் அபாயகரமான விளைவை நிரூபித்த வரலாற்று சோதனைகளில் ஒன்றாக இச்சோதனை கருதப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக