Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 24 அக்டோபர், 2018

தினை இட்லி



சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற தினை இட்லி

தேவையான பொருள்கள்:

  • தினை அரிசி நான்கு கப்
  • உளுத்தம் பருப்பு இரண்டு கப்
  • வெந்தயம் ஒன்றரை ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு  
  • இஞ்சி நெல்லிக்கனியை விட குறைவான அளவு  
  • கடுகு தேவையான அளவு  
  • கருவேப்பில்லை தேவையான அளவு  
  • துருவிய கேரட் தேவையான அளவு  
  • கொத்தமல்லி தேவையான அளவு  
  • கடலைப் பருப்பு தேவையான அளவு  


செய்முறை:

  • தினை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய இவை மூன்றையும் தனித்தனியாக ஊறவைத்து, தனித்தனியாகவே அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது அரைத்த தினை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய இவை மூன்றையும் ஒன்றாகக் கரைத்து சுமார் பத்து மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பின்னர் இஞ்சி, கடுகு, கடலைப் பருப்பு, கருவேப்பில்லை, கொத்தமல்லி, துருவிய கேரட் ஆகிய இவை அனைத்தையும் தாளித்து நீங்கள் அரைத்து வைத்து இருக்கும் மாவில் கொட்டவும். கொட்டி பின் நன்றாகக் கலக்கவும்.
  • இப்போது மேற்கண்ட மாவை இட்லி தட்டில் வைத்துக் குக்கரில் அவித்து எடுத்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.
  • இதோ இப்போது சுவையான தினை இட்லி தயார்.


தினை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதுபோன்ற பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக