Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 15 அக்டோபர், 2018

வெல்ல தோசை



இரவு தூக்கத்திற்கு உதவும் வெல்ல தோசை - தூக்க மாத்திரை இனி எதற்கு?

தேவையான பொருள்கள்:
மைதா மாவு 1 ஆழாக்கு
அரிசி மாவு 2 பிடி
வெல்லம் அரை ஆழாக்கு
ஏலக்காய் 1 
முந்திரிப் பருப்பு 4 (நன்கு உடைத்து வைத்துக் கொள்ளவும்)
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெல்லத் தூளைப் போட்டு ஒரு கரண்டி அல்லது போதுமான அளவு தண்ணீரை ஊற்றவும்.
பிறகு மேற்கண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
வெல்லம் நன்கு கரைந்த மாத்திரத்தில் பாத்திரத்தை இறக்கி வைத்து வடிகட்டவும்.
இப்போது நன்கு ஆற வைக்கவும்.
ஆறிய பின்பு நறுக்கிய முந்திரி, ஏலக்காய், மைதா மாவு, அரிசி மாவு இவற்றைச் சேர்த்து மேலும் தேவையான அளவு நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
தோசை வார்க்கும் சமயத்தில் டால்டா அல்லது எண்ணெய் ஊற்றலாம். டால்டா ஊற்றினால் தோசை மொறுமொறுப்பாக வரும். ஆனால் உடலுக்கு நல்லதல்ல என்பார்கள். எனவே நெய் அல்லது நல்லெண்ணையை பயன் படுத்தலாம்.

பொதுவாக சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை எப்போதுமே பயன்படுத்தி வருவது நல்லது. சர்க்கரை தான் நீரழிவு நோய்க்கு மிகப் பெரிய காரணம். ஆனால் வெல்லம் ஜீரண சக்திக்கு உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக