ஜீவ சமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார்.
பொதுவாக ஜீவ சமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் அந்த ஜீவ சமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும்.
நாம் அவற்றை வலம் வரும் போது, அந்த அதிர்வுகளானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்து விடும். பல மகான்கள் ஜீவ சமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக