Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 டிசம்பர், 2018

உண்மையிலேயே கருமை நிறத்தை போக்குமா குங்குமப் பூ...?

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும். 

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு,  முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம்  பொலிவடையும்.
 
கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு  சக்தியை உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே  குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.
 
கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை இட்டு அருந்தி வந்தாலோ, பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவ வலி இன்றியும் பிறக்கும்.


 
பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் குணமும் குங்குமப்பூவிற்கு உண்டு.மேலும், குங்குமப்பூவில் அழகின் ரகசியமும் ஒளிந்துள்ளது.
 
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால்  விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்  கூடாகக் காணலாம்.
 
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது  வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
 
நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த  அழகை மீட்டுத்தரும்.
 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக