Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 டிசம்பர், 2018

வீட்டிற்கு உள்ளே துணியை உலர்த்துவதால் உண்டாகும் ஆபத்து தெரியுமா..?

முன்பு எல்லாம் அழுக்கு துணியை துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டியிருந்தோம். அடுக்கு மாடி குடியிருப்புகள் வளர்ச்சியால் துவைத்த துணியை வீட்டிற்குள்ளே உலர்த்தி உடுத்திக் கொள்ளும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் உண்டாகும் பாதிப்பு அறிந்திருக்க வைப்பில்லை.



துணிகளில் நுண்கிருமிகள்:

நாம் துவைத்த துணிகளை நன்கு நீரில் அலசுவோம், துணியின் உள்ள அழுக்குகள் இல்லாமல் உள்ளதா என்று மட்டும் பார்ப்போம். நன்றாக அலசிய துணிகளில் நுண் கிருமிகள் இருக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவை தான் துணிகளில் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும்.



வீட்டில் உலர்த்துவதால்:

தற்போது பலருக்கும் நெருக்கடியால் வீட்டிலேயே துணிகளை உலர்த்திக் கொள்ள பல வடிவங்களில் உபகரணங்கள் உள்ளன. இவைகளில் வீட்டிலே துணிக எளிமையா உலர்த்திக் கொள்ளலாம் என்று பயன்படுத்துவீர்கள். அப்படி செய்வது மிகவும் தவறு. இதன் பின்விளைவுகள் அவர்கள் அறிந்திருக்க வைப்பில்லை.

துவைத்த துணியை வீட்டினுள் உலர்த்திக் கொள்வவதால் காற்றில் உள்ள நுண் கிருமிகள் எளிதில் துணிகளில் ஒட்டிக் கொள்ளும். வீட்டில் துணியை உலர்த்துவதால் நுண் கிருமிகளின் வளர்ச்சி 30% இருக்குமாம். துவைத்த துணிகளில் நுண் கிருமிகள் ஒருமாதிரியான வாடை ஏற்படுத்தும்.



உடல் பாதிப்பு:

வீட்டிலே உலர்த்திக் கொண்ட ஆடையை அணிவதால், சுவாசிக்கும் போது நுண் கிருமிகள் மூச்சுக் குழாயின் வழியே நுரையீரல் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா போன்ற நோய்களையும் விரைவிலே உண்டாக்க கூடும்.



வெயிலில் உலர்த்துவதால்:

துவைத்த துணியினை எப்போழுதும் காற்றோட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் உலர்த்துவதே நல்லது. வெயிலில் உலர்த்துவதால் நுண் கிருமிகள் இறந்துவிடுகின்றன. அதனால் துணிகளினால் எந்த வித பாதிப்பும் இல்லாமல மிகவும் நன்றாக இருக்கு முடியும்.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக