Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 டிசம்பர், 2018

கண்ண தொறக்கனும் சாமி.......

Image result for child praying cute

சமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த சில விஷயங்கள் ரொம்ப நெருடலா இருந்துச்சு. இப்படி தான் நம்ம சாமி கும்பிடுறோமா என யோசிக்கும்போது சிரிப்பா இருக்கு!
1) சாமி கும்பிடாதே, பிச்சை எடு! 
 
நான் சின்ன வயதில் (ரெண்டு, மூணு வயதில்), மெழுகுவத்தி எரிவதை பார்த்தால், உடனே கை கூப்பி 'சாமி கும்பிடுறேன்' என கண்களை மூடி கொள்வேன். உண்மையிலேயே சாமியிடம் எப்படி கும்பிடுவது, என்ன செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களா என தெரிவதில்லை.
சில நேரங்களில், பெற்றோர்களுக்கே உண்மையான வழிபாடு முறைகள் தெரிவதில்லை. 
போன வாரம், கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு சம்பவம். ஒரு அம்மா, தனது பிள்ளையிடம் (அவனுக்கு கிட்டதட்ட 11 அல்லது 12 வயது இருக்கும்)..."சரியா கும்பிடு" என்றார். 
பிள்ளை: எப்படி மா கும்பிடுறது?
அம்மா: நான் நல்லா இருக்கனும். பரிட்சையில நல்லா செய்யனும். நல்லா மார்க் வாங்கனும். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலுக்கு போகனும்-னு கும்பிடு டா!
நமது பிள்ளைகளிடம் ஏன் பிச்சை எடுக்க கத்து கொடுக்குறோம்?? 
2) இது நம்ம ஏரியா, உள்ள வராதே!
இத பத்தி ஏற்கனவே ஒரு தடவ சொல்லி இருக்கேனு நினைக்குறேன். கோயில்களில் ஏன் 'tourists are not allowed beyond this point" என்ற அறிவிப்பு பலுகை இருக்குனு தெரியல. போன வாரம் சென்ற கோயிலில் இல்லை. ஆனா, சில கோயில் வாசலிலே இருக்கு. சில கோயிலில் சாமி சிலை வரைக்கும் போகலாமா அதுக்கு அப்பரம் போக கூடாதாம்.
நம்ம தானே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' னு பெருமையா மார்தட்டி கொள்கிறோம்.
எம்மதமும் சம்மதம் என்றும் நம்ம தானே சொல்லிகிட்டு இருக்கோம். அப்பரம் ஏன் இந்த பாகுபாடு.
உன் தண்ணி என் தண்ணி, உன் காற்று என் காற்று, உன் சாமி என் சாமி-னு சொல்லி ஏன் இந்த பிரிவினை?? எனக்கு புரியல.
- "ஓ அவங்க சுத்தமா குளிச்சிட்டு வந்து இருக்காங்களானு தெரியாது... அதனால உள்ள விட முடியாது?" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார்.  (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்ல முடியுமா?)-
"ஓ....அவங்க கால் தெரியுற மாதிரி காற்சட்டை போட்டு வருவாங்க...." (நம்ம பொண்ணுக்கு முழு முதுகு தெரியுற மாதிரி சேலை அணிந்து வந்தால் தப்பு இல்ல??)
- "ஓ....அவங்க கண்டபடி புகைப்படம் எடுப்பாங்க." (யோவ், நம்ம ஆளுங்க, முழு படமே ரிலிஸ் பண்ணற அளவுக்கு கைபேசியில் வீடியோ எடுக்கலாம்....அது தப்பு இல்ல??)
3) முடி இல்ல, முடிவு எடுத்தேன். 
ரெண்டு  பக்தர்கள். 55 வயது ஆண்ட்டிஸ். தனது மகளின் திருமண பற்றி 'அனுமான்' சாமி பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.....இருந்துச்சுங்க!
ஆண்ட்டி 1: என் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்தோம்.
ஆண்ட்டி 2: from?
ஆண்ட்டி 1: பையன் கனடாவுல இருக்கான் (குரலில் சற்று பெருமை)
ஆண்ட்டி 2: முடிவு ஆச்சா?
ஆண்ட்டி 1: no, we rejected it.
ஆண்ட்டி 2: oh no. why?
ஆண்ட்டி 1: பையனுக்கு முடி இல்ல.
********************************************************************************
 கண்ண தொறக்கனும் சாமி இவங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க???
நல்ல புத்தியை கொடு சாமி. கண்ண சீக்கிரம் தொறங்க சாமி! 


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக