பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் பகோடா, அதுவும் வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, பாலக்கீரை,முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.
தேவையானவை
ஸ்பினாச் – ஒரு கட்டு
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
பூண்டு – இரண்டு பல்
பெருங்காயம் – ஒரு சிட்டிக்கை
உப்பு –¾ தேக்கரண்டி (அ) தேவைக்கு
ரெட் கலர் – ஒரு சிட்டிக்கை (விரும்பினால்)
பொடியாக அரிந்த வெங்காயம் – ஒன்று
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
தண்ணீர் – 2 மேசைக்கரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
எண்ணையை தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருகளையும் கட்டியாக பிசைந்து சிறு
சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.எண்ணையை காயவைத்து உருண்டைகளை மிதமான
தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக